காட்டுமன்னார்கோயிலில் கடும் குடிநீர் பஞ்சம்... காலிக்குடங்களுடன் பெண்கள் சாலை மறியல்
காட்டுமன்னார்கோயிலில் கடும் தண்ணீர் பஞ்சம் நிலவி வருகிறது. குடிக்கக் கூட நீர் இல்லாததால் பெண்கள் காலிக் குடங்களுடன் சாலை மறியலில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கடலூர்: கொளுத்தி எடுக்கும் கோடை வெயிலில் தமிழகம் முழுவதும் குடிநீர் பஞ்சம் நிலவி வருகிறது.
கடந்த ஆண்டு பருவமழை சரியாக பெய்யாமல் தமிழகத்தின் முக்கிய ஏரிகள் அனைத்து காய்ந்து கிடக்கின்றன.
கடும் வறட்சியால் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், குடிநீர் பஞ்சம் தமிழக மக்களை தற்போது பாடாய் படுத்தி வருகிறது.

காலிக் குடங்களுடன்...
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் அருகேயுள்ள எய்யலூர் கிராமத்தில் குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை. இதனால் கடும் கோபம் அடைந்த பெண்கள் காலிக் குடங்களுடன் காட்டுமன்னார்கோயில் - சிறுகாட்டூர் சாலையில் சாலைமறியலில் ஈடுபட்டனர்.

கால்நடைகளுடன்...
இதே போன்று தர்மபுரியிலும் கடந்த 6 மாதங்களாக குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை என்று கூறி பொதுமக்கள் தங்களின் கால்நடைகளுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். சேலம் வேலூர் பிரதான சாலையில் கால் நடைகளுடன் ஒன்று கூடிய பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

குமுறல்
அப்போது பேசிய பெண்கள், குடிநீரை கொண்டு வருவதற்கு 2 கிமீ தூரத்திற்கு செல்வதாகவும், இதனால் பள்ளிக் கூடங்களுக்கு பிள்ளைகளை அனுப்பி வைப்பதில் தாமதம் ஏற்படுகிறது என்று குற்றம்சாட்டினார்கள். மேலும் இந்த ஜனவரியில் தொடங்கிய குடிநீர் பிரச்சனை தற்போது பூதாகரமாக இருக்கிறது என்றும் அவர்கள் கூறினர்.

சாலை மறியல்
இதனைப் போன்றே விழுப்புரம் மாவட்டம் செஞ்சியிலும் குடிநீர் தட்டுப்பாடு கடுமையாக உள்ளது. குடிக்கவும் நீர் கிடைக்கவில்லை என்பதால் புதுச்சேரி கிருஷ்ணகிரி சாலையில் பெண்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. இதனையடுத்து போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி குடிநீர் கொடுப்பதற்கான ஏற்பாடுகளை செய்வதாக அளித்த உறுதிமொழிக்கு பின்னர் போராட்டத்தை பெண்கள் கைவிட்டனர்.
-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு! -
ஸ்டாலின் கொண்டு வந்த காலை உணவு திட்டம் தொடரும்.. மெனு மாற்றம்.. அமைச்சர் ராஜ்மோகன் உறுதி












Click it and Unblock the Notifications