டாஸ்மாக் கடை முன்பு குஷ்பு பேச்சு... குபீர் உற்சாகத்தில் குடிகாரர்கள்!
கரூர்: கரூரில் திமுக வேட்பாளர் ம. சின்னச்சாமியை ஆதரித்து நடிகை குஷ்பு அங்குள்ள டாஸ்மாக் கடை முன்பு வேனில் நின்றபடி பிரசாரம் செய்ததால் கடைக்குள் குடித்துக் கொண்டிருந்த குடிகாரர்கள் பலரும் பாட்டிலும் கையுமாக வெளியில் வந்து குஷ்புவை வேடிக்கை பார்த்து மகிழ்ந்தனர்.
திமுக வேட்பாளர்களை ஆதரித்து குஷ்பு தீவிரப் பிரசாரத்தில் இறங்கியுள்ளார். திறந்த வேனில் நின்றபடி அவர் பேசுகிறார்.
கரூரில் திமுக சார்பில் போட்டியிடும் சின்னச்சாமியை ஆதரித்து குஷ்பு பிரசாரம் செய்தார். கரூர் பஸ் நிலையம் அருகே உள்ள ரவுண்டானா பகுதியில் அவர் பிரசாரம் செய்தார். சரியாக டாஸ்மாக் கடை ஒன்றுக்கு எதிரே நின்றபடி பேசினார் குஷ்பு.

குஷ்பு வந்திருக்கிறார் என்று கடைக்குள் செய்தி பரவியதும், குடித்துக் கொண்டிருந்த குடிகாரர்களுக்கெல்லாம் எக்ஸ்ட்ரா சந்தோஷம் ஏறி அத்தனை பேரும் வெளியே ஓடி வந்தனர். பலர் பாட்டிலும் கையுமாக ஓடி வந்து விட்டனர்.
பாட்டிலையும், வாங்கிய வாட்டர் பாக்கெட்டையும் பேன்ட்டிலும், சட்டையிலும் திணித்தபடி குஷ்பு பேசுவதை ஆவலோடு வேடிக்கை பார்த்து மகிழ்ந்தனர்.
குடிக்க வந்த சிலரோ குஷ்பு பேசிட்டு போகட்டும் அப்புறம் போய் குடிக்கலாம் என்று முடிவு செய்து பாட்டிலை மட்டும் வாங்கிக் கொண்டு குஷ்பு பேச்சை ரசித்து முடித்த பிறகு கடைக்குள் போய் ஆற அமர குடித்தனராம்.
குஷ்பு பேசிய இடம் டாஸமாக் கடைக்கு முன்பாக என்பதால் திமுகவினர் பலரும் அதிருப்தியடைந்தனர்.
-
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
“முஸ்லீம் மக்களை காப்பாற்றும் லட்சணம் இதுதானா?" TVK + IUML கட்சிகளை லெஃப்ட் ரைட் வாங்கிய திமுக -
"கடைசி மூச்சு வரை உங்களுக்காக உழைப்பேன்!" - கலைஞர் கருணாநிதியின் இறுதிப் பேருரை.. என்ன பேசினார்? -
‘அல்காரிதம்’ புரியாததால் வந்த வினை! தவெகவின் அலையைக் கணிக்கத் தவறிய டிஆர்பி ராஜா.. அடியோடு மாறுதாம்! -
ராஜாக்கள் மந்திரியானால் இப்படித்தான்! டி.ஆர்.பி ராஜாவுக்கு எதிராக கிளம்பிய மா.செ.க்கள்! -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
திமுகவுடன் உறவு தொடரும்.. கம்யூனிஸ்ட்கள் அதிரடி முடிவு.. சண்முகம் பளீச்.. விஜய் ஷாக் -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்!












Click it and Unblock the Notifications