குடிகார கணவனால் தினம்தினம் தொல்லை - தீக்குளித்த மனைவி, மகள்!
சேலம்: சேலத்தில் தினமும் குடித்துவிட்டு வருகின்ற குடிகார கணவனின் கொடுமை தாங்காத மனைவி, மகள் தீக்குளித்த சம்பவம் அனைவரையும் வேதனையடையச் செய்துள்ளது.
சேலம் மாவட்டம், தம்மம்பட்டி காந்திநகரைச் சேர்ந்தவர் தொழிலாளி கணேசன். இவருக்கு மனைவி சித்ரா மற்றும் ப்ளஸ் 1 வகுப்பு படிக்கும் மகள் நீலா, மகன் விக்னேஷ் ஆகியோர் உள்ளனர்.
குடிப்பழக்கத்துக்கு அடிமையான கணேசன், தினமும் குடிபோதையில் மனைவி சித்ராவிடம் தகராறு செய்து வந்துள்ளார். நேற்று மாலை 3 மணியளவில் கணவன், மனைவிக்கும் இடையே வீட்டில் தகராறு ஏற்பட்டது.
இதில், மனமுடைந்த சித்ரா, அவரது மகள் நீலா ஆகிய இருவரும் நேற்று மதியம் 3.30 மணியளவில் வீட்டை உள்தாழிட்டு உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக்கொண்டனர்.
பற்றியெரிந்த தீயின் தாக்கத்தால், இருவரின் அலறல் சத்தம் கேட்டு மகன் விக்னேஷ் கதவை உடைத்து, தண்ணீர் ஊற்றி அணைத்துள்ளார். இதில், படுகாயமடைந்த சித்ரா, அவரது மகள் நீலா இருவரையும் ஆம்புலன்ஸ் மூலம் ஆத்தூர் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்தனர்.
அங்கு மருத்துவர்கள் முதலுதவி சிகிச்சை அளித்து மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்துள்ளனர். இச்சம்பவம் குறித்து தம்மம்பட்டி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications