டிஎஸ்பி விஷ்ணுபிரியா மரணம் தற்கொலைதான், கொலையல்ல.. நீதிமன்றத்தில் சிபிஐ அறிக்கை
டிஎஸ்பி விஷ்ணுபிரியா மரணம் தற்கொலைதான், கொலையல்ல என்று கோவை நீதிமன்றத்தில் சிபிஐ அறிக்கை தாக்கல் செய்துள்ளது.
Recommended Video

கோவை: டிஎஸ்பி விஷ்ணுபிரியா மரணம் தற்கொலைதான், கொலையல்ல என்று கோவை நீதிமன்றத்தில் சிபிஐ அறிக்கை தாக்கல் செய்துள்ளது. இதனால் டிஎஸ்பி விஷ்ணுபிரியா மர்ம மரணம் தொடர்பான வழக்கை சிபிஐ அதிகாரிகள் கைவிடுவதாக கூறியுள்ளனர்.
2015ஆம் ஆண்டு செப்டம்பர் 18ம் தேதியன்று திருச்செங்கோடு காவல்துறையினர் குடியிருப்பில் தனது அறையில் தூக்கில் தொங்கியபடி டிஎஸ்பி விஷ்ணுபிரியா சடலமாக மீட்கப்பட்டார்.அவர் தற்கொலை செய்து கொண்டார் என்று கூறப்பட்டது. ஆனால் மரணத்தில் மர்மம் உள்ளதாக கூறி சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று விஷ்ணுபிரியாவின் தந்தை ரவி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

சேலம் கோகுல்ராஜ் கொலை வழக்கை விசாரித்து வந்த விஷ்ணுபிரியா உயரதிகாரிகள் நெருக்கடி காரணமாகவே தற்கொலை செய்து கொண்டார் எனப்பட்டது. ஆனால் டிஎஸ்பி விஷ்ணுபிரியா தற்கொலை வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டது. விஷ்ணுபிரியாவின் தந்தை ரவி தொடர்ந்த வழக்கின் படி விசாரணை சிபிஐக்கு மாற்றப்பட்டது.
இதைத் தொடர்ந்து, கடலூரில் டிஎஸ்பி விஷ்ணுபிரியாவின் தந்தை ரவியிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர். கடந்த இரண்டு வருடமாக இந்த வழக்கில் விசாரணை நடந்தது. தற்போது இந்த வழக்கு முடிவிற்கு வந்துள்ளது.
டிஎஸ்பி விஷ்ணுபிரியா மரண வழக்கை சிபிஐ கைவிட்டதாக அறிவித்துள்ளது. டிஎஸ்பி விஷ்ணுபிரியா மரணம் தற்கொலைதான், கொலையல்ல என்று கோவை நீதிமன்றத்தில் சிபிஐ அறிக்கை தாக்கல் செய்துள்ளது.
டிஎஸ்பி விஷ்ணுபிரியா மரணம் தற்கொலையே. அவர் கொலை செய்யப்படுத்தற்கான முகாந்திரம் இல்லை என்று கூறியுள்ளது. இந்த வழக்கில் குற்றவாளிகள் யாருமே இல்லை என்று கோவை நீதிமன்றத்தில் சிபிஐ அறிக்கை தாக்கல் செய்துள்ளது. இதனால் வழக்கில் மேல்நடவடிக்கையை கைவிட சிபிஐ முடிவு செய்துள்ளனர்.
இதுகுறித்து வழக்கை விசாரித்த நீதிமன்றம் விஷ்ணுபிரியாவின் தந்தை ரவியிடம் கருத்து கேட்க முடிவு செய்துள்ளது. வரும் 9ம் தேதி ரவி ஆஜராகி கருத்து தெரிவிக்க வேண்டும் என்று நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது. ரவி இந்த விசாரணையில் ஆஜராவேன் என்று குறிப்பிட்டுள்ளார். சம்மன் வந்து இருப்பதால் ஆஜராவேன் என்றுள்ளார். சிபிஐ அறிக்கையை பார்த்துவிட்டு இதில் முடிவெடுப்பேன் என்றும் கூறியுள்ளார்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications