For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

திருச்சியில் "டபுள்" ஆன டாஸ்மாக் விற்பனை .. கடைசி நாளில் குவிந்த குடிகாரர்கள்!

By Super
Google Oneindia Tamil News

திருச்சி: தேர்தலையொட்டி நேற்று காலை முதல் மது விற்பனைக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் நேற்று முன்தினம் மது வாங்க பெரும் கூட்டம் கூடியதால் டாஸ்மாக் விற்பனை டபுள் ஆகியுள்ளது.

நாளை சட்டசபை தேர்தல் நடைபெறுவிதையொட்டி, மதுபிரியர்களை மதுவின் மூலம் கவர்ந்துவிடக் கூடாது என்பதற்காக டாஸ்மாக் கடைகள் நேற்று காலை 10 மணி முதல் 16ம் தேதி நள்ளிரவு வரையிலும் மற்றும் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாளான மே 19 ஆம் தேதி அன்றும் மூடுவதற்கு தேர்தல் ஆணையம் என உத்தரவிட்டுள்ளது.

Due to election holiday tasmac collection reached 5 crore in trichy.

நேற்று தொடங்கி 3 நாட்களுக்கு தொடர்ந்து டாஸ்மாக் கடைகள் மூடப்படுவதால் மதுக்கடைகளில் நேற்று முன்தினம் இரவு மதுபிரியர்கள் கூட்டம் வழக்கத்தை விட அலை மோதியது. மதுபிரியர்கள் அடுத்த 3 நாட்களுக்கும் சேர்த்து தங்களுக்கு தேவையானவற்றை வழக்கத்தை விட அதிமாக வாங்கிச் சென்றனர்.

Due to election holiday tasmac collection reached 5 crore in trichy.

இந்த நிலையில் திருச்சி மற்றும் சுற்றுவட்டாரத்தில் மது விற்பனை இரட்டிப்பாக இருந்ததாம். இது தெடர்பாக அதிகாரிகள் தரப்பில் கூறுகையில், திருச்சி மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் மொத்தம் 230 டாஸ்மாக் கடை கள் உள்ளன. நேற்று முன்தினம் மட்டும் சுமார் ரூ.5 கோடி வரை மது விற்பனையாகியுள்ளது என்றனர். இது வழக்கதை காட்டிலும் இரு மடங்கு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Tasmac sales reches 5 crore in a day trichy
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X