'கலைஞர் வாய்ஸ்'... ஜாலியாக உட்கார்ந்திருந்த துரைமுருகன் 'ஜெர்க்' !
சென்னை: திமுக வேட்பாளர்களுக்கான நேர்காணலில் படு சந்தோஷமாக உட்கார்ந்திருந்த முன்னாள் அமைச்சர் துரைமுருகனுக்கு, திமுக தலைவர் கருணாநிதியின் திடீர் பேச்சு அப்படியே தூக்கி வாரிப் போட்டு விட்டதாம்.
வாரிசுகளுக்கெல்லாம் சீட் கிடையாது என்று கருணாநிதி கூறியதுதான் துரைமுருகன் அதிர்ச்சி அடையக் காரணம். காரணம், அவர் மகன் கதிர் ஆனந்த் சீட் கேட்டு விண்ணப்பித்திருந்தார் என்பதால்.
வேலூர் தொகுதியைக் குறி வைத்திருந்தார் கதிர் ஆனந்த். இதற்காக துரைமுருகனும் பெரும் எதிர்பார்ப்பு மற்றும் நம்பிக்கையுடன் இருந்து வந்தார். ஆனால் கருணாநிதி இன்னொரு வேட்பாளரிடம் இப்படி பட்டென்று சொன்னதும் துரைமுருகன் முகம் வாடிப் போய் விட்டதாம்.

பொள்ளாச்சி தொகுதி நேர்காணலின்போது
தொகுதி வாரியாக நேர்காணலை நடத்தி வருகிறது. பொள்ளாச்சி தொகுதிக்கான நேர்காணலின்போதுதான் கருணாநிதி இப்படிப் பேசினாராம்.

பைந்தமிழ் பாரி
அந்தத் தொகுதியில் விருப்ப மனு தாக்கல் செய்திருந்த ஒருவரிடம் நேர்காணல் நடந்தது. அப்போது பெயர் பைந்தமிழ் பாரி என்று அவர் கூறினார். உடனே கருணாநிதி, உங்க அப்பா பெயர் என்று கேட்டார். அதற்கு பாரி, பொங்கலூர் பழனிச்சாமி, மாவட்டச் செயலாளர் என்று கூறியுள்ளார்.

வாரிசுகளுக்கெல்லாம் சீட் கிடையாது
உடனே கருணாநிதி, உங்களுக்கு நேர்காணல் கிடையாது என்று பட்டென்று கூறி விட்டார். இதைக் கேட்டு பாரி அதிர்ச்சியில் அப்படியே சமைந்து விட்டார். பின்னர் கருணாநிதியே, பாரி கட்சி வாரிசுகளுக்கு சீட் கிடையாது என்று சொல்ல பாரி அமைதியாக எழுந்து போய் விட்டாராம்.

துரைமுருகன் ஜெர்க்...
அப்போது நேர்காணலில் அமர்ந்திருந்த துரைமுருகன் கருணாநிதி கூறியதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்து விட்டார்.

காரணம்.. கதிர் ஆனந்த்
காரணம், அவரது மகன் கதிர் ஆனந்ததுக்கு சீட் கேட்டு விண்ணப்பித்துள்ள நிலையில் கருணாநிதி இப்படிக் கூறியதால்.

வேலூர் சீட்
துரைமுருகன் தனது மகன் கதிர் ஆனந்த்துக்கு வேலூர் சீட்டைக் கோரி வருகிறார். கதிர் ஆனந்த்தும் விருப்ப மனு தாக்கல் செய்துள்ளார்.

அவர் மட்டுமா...
அவர் மட்டுமல்ல, தூத்துக்குடி பெரியசாமி மகன் ஜெகன், ராமநாதபுரம் சுப. தங்கவேலன் மகன் சம்பத், கருப்பசாமி பாண்டியன் மகன் சங்கர், மாஜி சபாநாயகர் ஆவுடையப்பன் மகன் பிரபாகரன் என பலரும் கணக்கு வைத்துக் காத்திருந்தனர்.

பாரி மூலம் டோர் குளோஸ்...
ஆனால் எல்லாருக்கும் பைந்தமிழ் பாரி மூலம் கதவை மூ்டி விட்டார் கருணாநிதி. இதனால் அனைவரும் என்ன செய்வது என்று புரியாமல் கையைப் பிசைந்து வருகிறார்களாம்.
-
"கடைசி மூச்சு வரை உங்களுக்காக உழைப்பேன்!" - கலைஞர் கருணாநிதியின் இறுதிப் பேருரை.. என்ன பேசினார்? -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
ராஜாக்கள் மந்திரியானால் இப்படித்தான்! டி.ஆர்.பி ராஜாவுக்கு எதிராக கிளம்பிய மா.செ.க்கள்! -
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ் -
திமுகவுடன் உறவு தொடரும்.. கம்யூனிஸ்ட்கள் அதிரடி முடிவு.. சண்முகம் பளீச்.. விஜய் ஷாக் -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்!












Click it and Unblock the Notifications