அறிவாலயத்தில் கருணாநிதி கையெழுத்திட்டதும்... கன்னத்தை வருடி திருஷ்டி கழித்த துரைமுருகன்
அண்ணா அறிவாலயத்தில் உள்ள வருகை பதிவேட்டில் கருணாநிதி கையெழுத்திட்டதும் அவரது கன்னத்தை வருடிய துரைமுருகன் திருஷ்டி கழித்தார்.
Recommended Video

சென்னை: அண்ணா அறிவாலயத்துக்கு திடீரென வந்த கருணாநிதி அங்குள்ள வருகை பதிவேட்டில் கையெழுத்திட்டதும் அவரது கன்னத்தை வருடிய துரைமுருகன் திருஷ்டி கழித்தார்.
கடந்த ஓராண்டாக உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ள கருணாநிதி கட்சி சார்ந்த விஷயங்களில் நேரடியாக தலையிடுவது, தேர்தல் பிரசாரங்களில் பங்களிப்பது, குடும்ப மற்றும் கட்சியினரின் விழாக்களில் கலந்து கொள்வது போன்றவற்றை நிறுத்திக் கொண்டார்.
மேலும் அவருக்கு பிடித்த இடங்களான முரசொலி அலுவலகம் மற்றும் கட்சி அலுவலகத்துக்கு வருவதையும் நிறுத்திக் கொண்டதால் தொண்டர்கள் சற்று வேதனை அடைந்தனர்.

முரசொலி அலுவலகம்
தற்போது கருணாநிதியின் உடல்நலம் தேறி வருவதால் அவர் மெல்ல மெல்ல உடன்பிறப்புகளை சந்தித்து வருகிறார். முரசொலி அலுவலகத்துக்கு கருணாநிதி சென்றிருந்தார். அங்கு முரசொலி பவள விழா கண்காட்சி அரங்கை பார்வையிட்டார்.

வாசல் வரை வந்த கருணாநிதி
கடந்த மாதம் சென்னை வந்த பிரதமர் நரேந்தி மோடி கோபாலபுரத்துக்கு வந்து கருணாநிதியை சந்தித்து சென்றார். கருணாநிதியை உறவினர்கள் வாசல் வரை அழைத்து வந்தனர்.

கையசைத்த கருணாநிதி
கருணாநிதியை ஓராண்டுக்குப் பிறகு பார்த்த மகிழ்ச்சியில் தொண்டர்கள் துள்ளி குதித்தனர். அவர்களை பார்த்து கருணாநிதி புன்முறுவல் பூத்து பின்னர் கையசைத்தார்.

கருணாநிதி கையெழுத்து
இந்நிலையில் கருணாநிதி மிகவும் நேசிக்கும் கட்சி அலுவலகமான அண்ணா அறிவாலயத்துக்கு நேற்று இரவு திடீரென வருகை தந்தார். அப்போது தொண்டர்களுக்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். இதைத் தொடர்ந்து உள்ளே அழைத்து செல்லப்பட்ட கருணாநிதி அங்கிருந்த வருகை பதிவேட்டில் கையெழுத்திட்டார்.

திருஷ்டி கழித்த துரைமுருகன்
கருணாநிதியின் கையெழுத்தை பார்த்த திமுக மூத்த நிர்வாகிகள் துரைமுருகன் உள்ளிட்டோர் மிகவும் மகிழ்ச்சி அடைந்தனர். அப்போது பக்கத்தில் இருந்த துரைமுருகன் கருணாநிதியின் கன்னத்தை வருடி, திருஷ்டி கழித்தார்.
-
திமுகவில் உதயநிதிக்கு செயல் தலைவர் பதவி? மெல்ல நகரும் திட்டம்.. ஸ்டாலின் மேஜையில் ரிப்போர்ட் -
பொய் சொல்றாங்க..ஸ்டாலின் கூறியதற்கும், திமுக செய்வதற்கும் சம்பந்தமில்லை! வெளுத்துவிட்ட மா.கம்யூ -
சிலுப்பிகிட்டு போகும் சிறுத்தை குட்டிகள்..க்ரீன் சிக்னல் காட்டிய அறிவாலயம்! குறுக்கே நிற்கும் திருமா -
கூட்டணி கட்சிகளுக்குள் வெடித்த கலவரம்: திமுக - விசிக இடையே பயங்கர கல்வீச்சு! தடியடி நடத்திய போலீசார் -
"வாயை மூடி பேசவும்" மாவட்டச் செயலாளர்கள் கண்ட்ரோலில் திமுக குழு.. விரக்தியில் அடிமட்ட தொண்டர்கள்! -
திமுகவின் TAPS தேவாமிர்தம்.. இப்போ OPS வேணுமா? கரைவேட்டி கட்டாத கட்சிக்காரர்கள்.. TNGEA விளாசல்! -
CM Saar.. மாறி மாறி மக்களை ஏமாற்றும் விஜய்.. SCAM செய்யும் தவெக அரசு.. உதயநிதி ஸ்டாலின் அதிரடி! -
சென்னையில் மின்வெட்டின் பின்னணி.. அமைச்சர் கருத்துக்கு திமுக தொழிற்சங்கம் திட்டவட்டமாக மறுப்பு -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம்












Click it and Unblock the Notifications