பறிமுதல் செய்த ரூ.15.8 லட்சத்தை பத்திரமாக திருப்பிக் கொடுத்த தேர்தல் அதிகாரிகள்- வீடியோ
Subscribe to Oneindia Tamil
கோவை: கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் சட்டசபை தொகுதிக்குட்பட்ட பெரியநாயக்கன்பாளைம் பேருந்து நிலையத்தில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை நடத்தினர். அப்போது கேரள மாநிலத்தில் இருந்து காரமடை நோக்கி சென்ற காரை மடக்கி அதில் இருந்த ரூ.15 லட்சத்து 80 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர்.
அந்த பணத்திற்கான உரிய ஆவணங்களை காண்பித்ததும் அதை அதிகாரிகள் திருப்பிக் கொடுத்தனர். வியாபாரத்திற்கு எடுத்துச் செல்லும் பணத்தை பறிமுதல் செய்து திருப்பிக் கொடுக்க தேர்தல் அதிகாரிகள் லஞ்சம் கேட்கின்றனர் என்ற புகார் எழுந்த நிலையில் இந்த தொகை திருப்பிக் கொடுக்கப்பட்டுள்ளது.
வீடியோ:












Click it and Unblock the Notifications