சசிக்காக எடப்பாடி பெயரில் தேர்தல் ஆணையத்தில் பதில்? தினகரன் அதிரடியால் பதட்டத்தில் பழனிச்சாமி!
சசிகலாவுக்காக தமது பெயரில் தேர்தல் ஆணையத்துக்கு பதிலனுக்க டிடிவி தினகரன் எடுத்துள்ள முடிவால் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அதிர்ந்து போயுள்ளாராம்.
சென்னை: தேர்தல் ஆணையத்தில் சசிகலாவுக்காக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பெயரில் பதில் மனுவைத் தாக்கல் செய்யலாம் என தினகரன் திட்டமிட்டுள்ளாராம். ஆனால் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியோ தம்முடைய பதவிக்கு தினகரன் வேட்டு வைக்கப் போகிறாரோ என பீதியடைந்து போயுள்ளாராம்.
சசிகலா சிறைக்குப் போனது போதும்... அதிமுக கட்சியும் ஆட்சியும் தினகரன் வசமாகிக் கொண்டே போகிறது. அவர் முன்னெடுக்கும் வியூகங்கள் எல்லாமே எல்லோரையுமே பீதிக்குள்ளாக்குகிறது.

தேர்தல் ஆணையம் கறார்
தேர்தல் ஆணையம் சசிகலாவிடம் பொதுச்செயலர் நியமனம் குறித்து பதில் கேட்டால் தமது பெயரில் பதிலைக் கொடுத்தார் தினகரன். இது சசிகலாவுக்கு சிக்கலைக் கொடுக்க அவர்தான் பதிலைக் கொடுக்க வேண்டும் என கறாராக சொல்லிவிட்டது தேர்தல் ஆணையம்.

வம்படியாக தினகரன்
ஆனாலும் தினகரன் சும்மா இருக்கவில்லை. இப்போதும் சசிகலாவுக்கு பதில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பெயரில் ஒரு அறிக்கை ஒன்றை கொடுக்கலாம் என திட்டமிட்டுள்ளாராம்.

திகிலில் எடப்பாடி
சசிகலாவே பதில் தர வேண்டும் என்று உத்தரவிட்ட பின்னரும் திட்டமிட்டே தேர்தல் ஆணையத்தை வெறுப்பேற்றும் வகையில் தினகரன் செயல்படுகிறாரே என அதிர்ந்து போயுள்ளனர் அதிமுக நிர்வாகிகள். முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியோ தினகரனின் இந்த நடவடிக்கையால் பதவி பறிபோகுமோ என திகிலடித்து போயுள்ளாராம்.

சசி சந்திப்புக்கு பின்...
இதனால் தினகரனிடம் மூத்த அமைச்சர்கள் ஒருவரது பெயரில் அறிக்கையை கொடுக்கலாமே என யோசனை தெரிவித்துள்ளாராம் எடப்பாடியார். இதை கேட்டுக் கொண்ட தினகரன், சசிகலாவை சந்திக்க போகிறேன் பின்னர் முடிவெடுக்கலாம் என அசால்ட்டாக சொல்லிவிட்டாராம்.
-
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications