தேமுதிகவுக்கு ராஜ்யசபா சீட்டா? நாங்க சொன்னோமா? எடப்பாடி பழனிசாமி விளக்கம்! பிரேமலதாவுக்கு அதிர்ச்சி?
ஆத்தூர்: தேமுதிகவிற்கு மாநிலங்களவை சீட் வழங்குவதாக அதிமுக கூறியிருக்கிறதா, போய் தேர்தல் அறிக்கையில் என்ன இருக்கிறது என்பதை பாருங்கள் என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியிருப்பது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து சேலம் மாவட்டம் ஆத்தூரில் நடந்த அதிமுக பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்ட எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் தேமுதிகவுக்கு ராஜ்யசபா சீட் கொடுக்கவுள்ளதாக கூறப்படுகிறதே அது உண்மையா என கேட்டனர்.

அதற்கு எடப்பாடி பழனிசாமி, அதிமுக எங்காவது அப்படி சொல்லியிருக்கிறதா, தேவையின்றி யார் யாரோ சொல்லியிருப்பதை எல்லாம் எங்களிடம் கேட்காதீர்கள். அதிமுக தேர்தல் அறிக்கையில் என்ன இருக்கிறது என்பதை மட்டும் பாருங்கள் என தெரிவித்தார்.
கடந்த பிப்ரவரி மாதம் 12 ஆம் தேதி சென்னையில் நடந்த விழாவின் போது தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் தமிழகத்தில் காலியாக உள்ள 6 ராஜ்யசபா சீட்டுக்கான தேர்தல் குறித்து கேட்கப்பட்டது.
அதற்கு பிரேமலதா, அதிமுகவுடன் நாடாளுமன்றத் தேர்தலுக்கான கூட்டணி அமைந்த போதே தேமுதிகவுக்கு ராஜ்யசபா சீட் உறுதியாகிவிட்டது. அந்த தேர்தல் வரும் போது எங்கள் கட்சியில் இருந்து யாரை டெல்லிக்கு அனுப்பப் போகிறோம் என்பதை அறிவிப்போம் என தெரிவித்திருந்தார்.
பிரேமலதா இப்படி கூறும் நிலையில் இதுவரை மறுப்பு தெரிவிக்காத அதிமுக, இன்று செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த போது மறுத்துள்ளது. எனவே வரும் 2026 ஆம் ஆண்டு தமிழக சட்டசபை தேர்தலில் தேமுதிகவை ஓரங்கட்டிவிட்டு பாஜகவுடன் அதிமுக கூட்டணி அமைக்க வழிவகை செய்கிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது.
அதே வேளையில் பாஜகவுடன் கூட்டணியா என கேட்ட போது, சிடுசிடுத்த எடப்பாடி, இன்னும் 6 மாதங்கள் கழித்து இந்த கேள்வி கேளுங்கள் என தெரிவித்திருந்தார். இதுவரை பாஜகவுடன் கூட்டணியா என யார் கேட்டாலும் "இனி எந்த காலத்திலும் பாஜகவுடன் கூட்டணி கிடையாது" என கூறி வந்த நிலையில் தற்போது தேமுதிகவுக்கு ராஜ்யசபா சீட் என எப்போது அதிமுக கூறியது என கேட்கிறார்.
எனவே தேமுதிகவுக்கு ராஜ்யசபா சீட் குறித்து எழுத்துப்பூர்வ ஒப்பந்தம் ஏதேனும் இருக்கிறதா என்பதை இனி பிரேமலதாதான் தெளிவுப்படுத்த வேண்டும். இல்லாவிட்டால் வாய்மொழி உத்தரவா என்பதையும் அவர் விளக்க வேண்டும். அப்போதுதான் இந்த சலசலப்பு அடங்கும்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications