இனி பிளஸ் 1க்கும் பொதுத்தேர்வு - தனியார் பள்ளிகளுக்கு ஆப்பு வைக்கப் போகும் அரசு
பிளஸ் 1 வகுப்புகளுக்கும் பொதுத்தேர்வு நடத்த பரிசீலனை செய்யப்படும் என்ற அரசின் அறிவிப்பு பல தனியார் பள்ளிகளின் வயிற்றில் புளியை கரைத்துள்ளது.
சென்னை: பிளஸ் 2 , எஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வுகள் போல இனி பிளஸ் 1 வகுப்புகளுக்கும் பொதுத்தேர்வு நடத்த பரிசீலனை செய்யப்படும் என்று அறிவித்துள்ளார் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்.
இந்த அறிவிப்பு இரண்டு ஆண்டுகளுக்கு பிளஸ் 2 பாட புத்தகங்களை மட்டுமே நடத்தும் கோழிப்பண்ணை தனியார் பள்ளிகளின் வயிற்றில் புளியை கரைத்துள்ளது. பிளஸ் 1 பாடப்புத்தகங்களை மாணவர்களின் கண்களில் காட்டாமல் பிளஸ் 2 பாடப்புத்தகங்களை மட்டுமே மனப்பாடம் செய்ய வைக்கும் தனியார் பள்ளிகளுக்கு ஆப்பு வைக்கும் விதமாகவே அரசு இந்த முடிவினை எடுத்துள்ளது.

பொதுத்தேர்வு
தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு நன்றாக படித்து தேர்வு எழுதும் மாணவர்கள் மேல்நிலைக்கல்வியில் சேர்ந்த உடன் பிளஸ் 1 பாடப்புத்தகங்களை சரியாக படிப்பதில்லை. காரணம் பொதுத்தேர்வு இல்லையே என்ற அஜாக்கிரதைதான். இது பிளஸ் 2 வகுப்பிற்குள் நுழைந்த உடன் அதிக அழுத்தத்தை தரும்.

பிளஸ் 1 பாடப்புத்தகம்
அரசு பள்ளிகளில் மேல்நிலைக்கல்வி பயிலும் மாணவர்கள், பிளஸ் 1 பாடப் புத்தகங்களை ஓரளவிற்காவது படித்திருப்பார்கள். ஆனால் வியாபார நோக்கில் நடத்தப்படும் தனியார் பள்ளிகளிலோ 9ஆம் வகுப்பு, பிளஸ் 1வகுப்பு பாட புத்தகங்களை நடத்துவதே இல்லை.

மனப்பாடம்
பிளஸ் 1 சேரும்போதே பிளஸ் 2 பாடப்புத்தகங்களைத்தான் படிக்கச் சொல்வார்கள். இரண்டு ஆண்டுகளுக்கும் ஒரே பாட புத்தகத்தை படிக்க வைத்து அவர்களை மனப்பாட புழுக்களாக மாற்றி விடுவார்கள். அந்த மாணவர்களுக்கு பிளஸ் 1 பாடப்புத்தகத்தில் என்ன இருக்கும் என்பதே தெரியாது.

மாயத்தோற்றம்
இதனால் அரசு பள்ளி மாணவர்களை விட தங்கள் பள்ளி மாணவர்கள் அதிக மதிப்பெண் பெறுவதாக ஒருவித மாயத்தோற்றத்தை உருவாக்கி, கடன் வாங்கியாவது தனியார் பள்ளிகளில் சேர்த்து படிக்க வைத்து விட வேண்டும் என்ற நிலைக்கு தள்ளுகின்றன தனியார் பள்ளிகள்.

பொதுத்தேர்வு
இது போன்ற பள்ளிகளுக்கு ஆப்பு வைக்கும் விதமாக 3 ஆண்டுகளுக்குள் பிளஸ் 1 வகுப்புக்கும் பொதுத்தேர்வு நடத்தப்படும் என்று அறிவித்துள்ளார் அமைச்சர் செங்கோட்டையன். இந்த அறிவிப்பு தனியார் பள்ளிகளுக்கு இடிதான். பள்ளி பொதுத்தேர்வில் ரேங்க் முறையை மாற்றிய செங்கோட்டையன், பிளஸ் 1 வகுப்புக்கும் பொதுத்தேர்வை நடத்தி விட்டால் நிஜமாகவே வரலாற்றில் இடம்பெற்று விடுவார்.
-
பிளஸ்-2 துணைத்தேர்வு: விண்ணப்பிக்க கூடுதல் அவகாசம்; ஜூன் 4 வரை பதிவு செய்யலாம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications