சுவாதி கொலை வழக்கு: ராம்குமாரின் காவல் செப்.9 வரை நீட்டிப்பு
சென்னை: சுவாதி கொலை வழக்கில் கைதான ராம்குமாரின் நீதிமன்றக் காவல் செப்டம்பர் 9-ம் தேதிவரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஜூன் மாதம் 24ஆம் தேதி, சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் மென்பொறியாளர் சுவாதி கொலைசெய்யப்பட்டார். இந்த வழக்கில் நெல்லை மாவட்டம் செங்கோட்டை அருகே உள்ள மீனாட்சிபுரத்தைச் சேர்ந்த ராம்குமார் (24) கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

கைது செய்யப்பட்ட ராம்குமாரை போலீசார் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர். தொடர்ந்து, புழல் சிறையில் அடையாள அணிவகுப்பும் நடத்தப்பட்டது. அதனையடுத்து, அவர் நீதிமன்றக் காவலில் மீண்டும் அடைக்கப்பட்டார்.
பாதுகாப்பு கருதி கடந்த மாதம் வீடியோ கான்பரன்சிங் மூலம் கோர்ட் விசாரணைக்காக எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, வீடியோ கான்பரன்ஸ் மூலம் ராம்குமாரிடம் நீதிபதி விசாரணை நடத்தி நீதிமன்ற காவலை ஆகஸ்ட் 1-ம் தேதி வரைக்கும், அதன் பிறகு 12 ஆம் தேதி வரைக்கும் நீட்டிக்க உத்தரவிட்டார். இதையடுத்து 12-ந்தேதி மீண்டும் ராம்குமார் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது இன்று வரை காவல் நீட்டிக்கப்பட்டது.
இந்நிலையில் ராம்குமாரை இன்று புழல் சிறையிலிருந்து வீடியோ கான்பரன்சிங் மூலம் போலீசார் எழும்பூர் 13-வது பெருநகர குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அப்போது அவரை விசாரித்த நீதிபதி, ராம்குமாரின் நீதிமன்ற காவலை வருகிற செப்டம்பர் மாதம் 9-ம் தேதி வரை நீட்டித்து உத்தரவு பிறப்பித்தார்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications