திருநாவுக்கரசர், சிதம்பரத்துக்கு நோ.. குஷ்புவுக்கு ஓ.கே.. சோனியாவுக்கு கடிதம் எழுதினாரா இளங்கோவன்?
திருச்சி: தமிழக காங்கிரஸ் கமிட்டியின், புதிய தலைவர் யார் தலைவர் என்பதை விரைவில் சோனியா காந்தி அறிவிப்பார் என்று, நிருபர்களிடம் பேசிய தமிழக காங். கமிட்டி முன்னாள் தலைவர் இளங்கோவன் கூறினார்.
சட்டசபை தேர்தல் தோல்வியை தொடர்ந்து, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக இருந்த ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கடந்த சில வாரங்கள் முன்பு தனது பதவியை ராஜினாமா செய்தார்.
எனவே, தமிழக காங்கிரசுக்கு புதிய தலைவராக யாரை நியமிப்பது என்பது குறித்து காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும், துணைத்தலைவர் ராகுல் காந்தியும் ஆலோசனை நடத்தி வருகிறார்கள்.

போட்டியில் முக்கிய புள்ளிகள்
ப.சிதம்பரம், திருநாவுக்கரசர், வசந்தகுமார், டாக்டர் ஜெயக்குமார், சுதர்சன நாச்சியப்பன், கராத்தே தியாகராஜன், நடிகை குஷ்பு ஆகியோர் தலைவர் பதவி ரேசில் உள்ளனர்.

இருவருக்கு பிரகாச வாய்ப்பு
திருநாவுக்கரசர் அல்லது ப.சிதம்பரம் ஆகியோரில் ஒருவர் தலைவராக நியமிக்கப்படலாம் என்ற தகவல்கள் காட்டுத் தீ போல பரவி வருகிறது.

இளங்கோவன் கடிதம்
எனவே, இந்த இரு தலைவர்கள் பற்றியும் புகார் செய்து சோனியா காந்திக்கு ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கடிதம் அனுப்பியதாகவும் தகவல்கள் வெளியானது. குஷ்புவை தலைவராக்க வேண்டும் என்றும், அவரே அனைத்து தலைவர்களிடமும் இணக்கமாக இருக்க கூடியவர் என்றும் அந்த கடிதத்தில் இளங்கோவன் கூறியதாக சில ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது.

சோனியா கையில் முடிவு
இந்த தகவலை, இன்று, ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மறுத்துள்ளார். ஆனால் திருச்சியில் நிருபர்களிடம் பேசிய இளங்கோவன் கூறியதாவது: புதிய தலைவர் யார் தலைவர் என்பதை விரைவில் சோனியா காந்தி அறிவிப்பார்.

வதந்தி
புதிய தலைவராக திருநாவுக்கரசர் அல்லது ப.சிதம்பரத்தை நியமிக்க கூடாது என புகார் தெரிவித்து நான் சோனியா காந்திக்கு கடிதம் எழுதியாக வதந்தி பரவுகிறது. சோனியா காந்திக்கு நான் உட்கட்சி நிலவரம் குறித்து கடிதம் எழுதியது உண்மைதான். அதில் என்ன எழுதினேன் என்பதை வெளிப்படையாக தெரிவிக்க முடியாது. அதுகுறித்து வெளியாகும் தகவல்கள் அனைத்தும் பொய்யானவை. இவ்வாறு இளங்கோவன் தெரிவித்தார்.

மவுனம் பேசியதே..
புதிய தலைவரை நியமிக்கும் வரை ஊடகங்கள் மற்றும் செய்தியாளர்களிடம் பேசமாட்டேன், மவுன விரதம் இருப்பேன் என்று கூறிய அவர் திருச்சியில் மவுனம் கலைத்தது குறிப்பிடத்தக்கது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications