For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஆர்கே நகரில் சோதனையிட்ட அதிகாரிகள்... எதிர்ப்புத் தெரிவித்த தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ

ஆர்கே நகரில் தினகரனை ஆதரித்து பிரச்சாரம் செய்ய வந்த சீர்காழி எம்.எல்.ஏ. பாரதியை தேர்தல் அதிகாரிகள் சோதனையிட்டதால், அவர் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து காரில் விருட்டென பறந்துவிட்டார்.

By Suganthi
Google Oneindia Tamil News

சென்னை: தினகரனை ஆதரித்து பிரச்சாரம் செய்வதற்காக சீர்காழி எம்.எல்.ஏ பாரதி ஆர்கே நகர் வந்துள்ளார். அவருடைய வாகனத்தை துணை ராணுவத்தினர் மறித்து சோதனை செய்துள்ளனர். இதனால் கோபமடைந்த எம்.எல்.ஏ அவர்களிடம் வாக்குவாதம் செய்து, அங்கிருந்து விருட்டென கிளம்பியுள்ளார்.

ஆர்கே நகரில் கடந்த சில நாட்களாக வாக்காளர்கலுக்கு பணம் கொடுக்கப்படுகிறது என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால், அங்கு தேர்தல் அதிகாரிகலும் துணை ராணுவத்தினரும், காவல்துறையினரும் கடும் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

 Election official checked Dinakarn support MLA bharathi in RK nagar

அப்போது சீர்காழி எம்.எல்.ஏ பாரதி, தன் காரில் வந்துள்ளார். அவரை வழிமறித்த்து சோதனை செய்துள்ளனர் துணை ராணுவத்தினர். அப்போது அவருடை உதவியாளரிடமிருந்து 25,000 ரூபாய் கைப்பற்றப்பட்டுள்ளது. உடனே தேர்தல் அதிகாரிகள் எம்.எல்.ஏவை சோதனையிட முயற்சித்துள்ளனர்.

ஆனால் இந்த சோதனைக்கு எதிர்ப்புத் தெரிவித்த அவர், 'நான் யார் தெரியுமா? எம்.எல்.ஏ' எனக் கூறி சட்டென காருக்குள் உட்கார்ந்து கிளம்பிவிட்டதால், அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

English summary
Sirkali MLA Bharathi came RK nagar to support, Dinakaran. while he entering into Rk Nagar para military and election officials stopped his car and checked him. But he opposed and went on immediately.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X