சென்னை - காட்பாடி ரயில் அரக்கோணம் அருகே தடம் புரண்டு விபத்து! ரயில் சேவை கடும் பாதிப்பு!

Subscribe to Oneindia Tamil

ராணிப்பேட்டை: சென்னையில் இருந்து காட்பாடி சென்ற மின்சார ரயில் அரக்கோணம் அருகே தடம் புரண்டு விபத்துக்கு உள்ளானது. அதிர்ஷ்டவசமாக இதில் யாருக்கும் உயிர் சேதமில்லை.

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தை அடுத்த சித்தேரி அருகே தண்டவாளம் உடைந்து சேதம் அடைந்தது. இதனால் அரக்கோணம் - காட்பாடி செல்லும் ரயில்கள் நிறுத்தப்பட்டன.
சென்னை - பெங்களூர் இடையே ரயில் சேவை பாதிக்கப்பட்டது.

Electric Train from Chennai to Katpadi Derails Near Arakkonam

சென்னையில் இருந்து காட்பாடிக்கு மின்சார ரயில் சென்று கொண்டிருந்தது. 9 பெட்டிகள் கொண்ட அந்த ரயில் சித்தேரி ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்ட நிலையில் மூன்றாவது பெட்டி தண்டவாளத்தை விட்டு இறங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. நல்வாய்ப்பாக இந்த விபத்தில் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை.

தண்டவாளம் உடைந்திருப்பதை கண்டு ரயிலை சாமர்த்தியமாக நிறுத்திய ஓட்டுநரால் பெரும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். ஓட்டுநர் அளித்த தகவலின் அடிப்படையில் அதிகாரிகள் தண்டவாளத்தை ஆய்வு செய்து வருகின்றனர்.

இந்த ரயில் விபத்து காரணமாக காட்பாடி செல்லும் அனைத்து ரயில் சேவைகளும் ரத்து செய்யப்பட்டன. சென்னை - பெங்களூர் இடையே ரயில் சேவை பாதிக்கப்பட்டது. ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டதால் பயணிகள் பெரும் அவதிக்கு உள்ளாகினர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+