வணிக வளாகங்களை மது வளாகங்களாக மாற்ற அதிமுக அரசு திட்டம்: ராமதாஸ் தாக்கு

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
மது அரக்கன் ஒழிக்கப்பட வேண்டும் என்ற முழக்கம் தமிழகம் முழுவதும் ஒலிக்கத் தொடங்கியுள்ள நிலையில், மதுவை வெள்ளமாக பாயவிடும் புதிய திட்டத்தை மிகவும் ரகசியமாக தமிழக அரசு தொடங்கியுள்ளது. மக்கள் அதிகம் கூடும் வணிக வளாகங்களில் நவீன மதுக்கடைகளை திறப்பது தமிழக அரசின் புதிய திட்டமாகும்.
இத்திட்டத்தின் தொடக்கமாக சென்னை எழும்பூரில் உள்ள அல்சா மால் என்ற தனியார் வணிக வளாகத்தில் நவீன ஆடம்பர மதுக்கடை சில நாட்களுக்கு முன் திறக்கப்பட்டிருக்கிறது. அடுத்த கட்டமாக சென்னை அண்ணா சாலையில் உள்ள எக்ஸ்பிரஸ் அவென்யூ என்ற தனியார் வணிக வளாகத்திலும், அதைத் தொடர்ந்து மயிலாப்பூர் ராதாகிருஷ்ணன் சாலை, வேளச்சேரி, வடபழனி, கிழக்குக் கடற்கரை சாலை உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் ஆடம்பர மதுக்கடைகள் அடுத்த சில வாரங்களில் திறக்கப்பட உள்ளன.
அடுத்த மூன்றாண்டுகளில் சென்னை உள்ளிட்ட 10 மாநகராட்சிகளில் மொத்தம் 200 ஆடம்பர மதுக்கடைகளை திறக்க தமிழக அரசு முடிவு செய்திருப்பதாகவும், அதன் முதல்கட்டமாக வரும் மார்ச் மாதத்திற்குள் 53 மதுக்கடைகள் திறக்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது. இக்கடைகளில் ஆயிரம் ரூபாய்க்கும் அதிக விலை கொண்ட மது வகைகள் மட்டுமே விற்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2011 ஆம் ஆண்டில் அதிமுக ஆட்சிக்கு வந்ததுமே பணக்காரர்களின் பயன்பாட்டிற்காக எலைட் மதுக்கடைகள் என்ற பெயரில் தமிழகம் முழுவதும் 200 மதுக்கடைகளை திறக்க திட்டமிடப்பட்டது.
இவ்வகை மதுக்கடைகளுக்கு மக்களிடம் எதிர்ப்பு எழுந்ததாலும், இது தொடர்பான வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் தமிழக அரசுக்கு கண்டனம் தெரிவித்ததாலும் எலைட் கடைகளை திறக்கும் திட்டத்தை கடந்த ஆண்டில் தமிழக அரசு கைவிட்டது.
தற்போது எலைட் மதுக்கடைகள் திட்டத்தை வேறு பெயரில் செயல்படுத்த தமிழக அரசு முயல்கிறது. மதுவால் சாலை விபத்து முதல் சமூக அமைதி சீர்குலைவது வரை அனைத்து சீரழிவுகளும் ஏற்பட்டு வரும் நிலையில் புதுப்புது பெயர்களில் மதுக்கடைகளை திறக்க தமிழக அரசு முயல்வது கண்டிக்கத்தக்கது. பெண்களும், குழந்தைகளும் அதிக அளவில் கூடும் வணிக வளாகங்களில் மதுக்கடைகளைத் திறப்பது பல்வேறு தீமைகளுக்கு வழிவகுக்கும்.
கடந்த ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதி விடுதலை நாளையொட்டியும், அக்டோபர் 2 ஆம் தேதி மகாத்மா காந்தியடிகள் பிறந்த நாளையொட்டியும் தமிழகம் முழுவதும் நடந்த கிராமசபைக் கூட்டங்களின் போது மதுக்கடைகளை மூட வேண்டும் என்று வலியுறுத்தி ஆயிரக்கணக்கான கிராமங்களில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மக்களின் உணர்வுகளை மதித்து இத்தகைய தீர்மானங்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக்கிளை ஏற்கனவே தீர்ப்பளித்திருக்கிறது.
அதை மதித்து மதுக்கடைகளை மூட வேண்டிய தமிழக அரசு, புதிய மதுக்கடைகளை திறப்பது சரியல்ல. எனவே, நவீன மதுக்கடைகள் என்ற பெயரில் எலைட் மதுக்கடைகளை திறந்து வணிக வளாகங்களை மது வளாகங்களாக மாற்றும் திட்டத்தை தமிழக அரசு கைவிட வேண்டும் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications