அப்பல்லோ மருத்துவமனையில் அமைச்சர்கள், டிஜிபி, போலீஸ் கமிஷனர் ஆலோசனை!
சென்னை: தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல் நலக்குறைவால் அனுமதிக்கப்பட்டுள்ள அப்போலோ மருத்துவமனையில் அமைச்சர்கள் அவசரமாகக் கூடி சுமார் ஒரு மணி நேரம் ஆலோசனை நடத்தினார்கள்.
தமிழக முதல்வர் ஜெயலலிதா கடந்த 22ம் தேதி உடல்நலக்குறைவின் காரணமாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனை நிர்வாகம் இதுவரை 4 செய்திக் குறிப்புகளை வெளியிட்டு ஜெயலலிதா நன்றாக இருப்பதாகவும் வழக்கமான உணவு உட்கொள்வதாகவும் கூறி வருகிறது. என்றாலும் அவர் தொடர்ச்சியாக மருத்துவமனையிலேயே இருக்கிறார்.'

10வது நாளான நேற்று மாலை தமிழக ஆளுநர் வித்தியாசாகர் ராவ் அப்போலோ மருத்துவமனைக்குச் சென்று முதல்வருக்கு அளிக்கப்பட்டுள்ள சிகிச்சை குறித்து மருத்துவர்களிடம் பேசிவிட்டு சென்றார்.
இந்நிலையில், 11வது நாளான இன்று தமிழக அமைச்சர்கள் அனைவரும் ஒரே நேரத்தில் அப்போலோ மருத்துவமனைக்கு அவசரமாக விரைந்து வந்தனர். ஓ.பன்னீர் செல்வம், ஜெயக்குமார், ராஜேந்திர பாலாஜி, சிவிசண்முகம், எடப்பாடி பழனிச்சாமி, விஜயபாஸ்கர், திண்டுக்கல் சீனிவாசன் உள்பட அனைத்து அமைச்சர்களும் வந்தனர்.
அதேபோல டிஜிபி ராஜேந்திரன், சென்னை போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகளும வந்தனர். அங்கு வைத்து ஒரு மணி நேரத்திற்கும் மேலாக ஆலோசனை நடந்ததாக கூறப்படுகிறது. அந்த ஆலோசனைக்குப் பின்னர் அனைவரும் அங்கிருந்து வெளியேறினர். பத்திரிகையாளர்கள் அவர்களிடம் என்ன ஏது என்று கேட்டபோது யாரும் பதிலளிக்கவில்லை.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications