ஜெ. மரணம் பற்றி விசாரணை கமிஷன்.. அப்பல்லோ மருத்துவமனை வரவேற்பு
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் பற்றி விசாரிக்க கமிஷன் அமைக்கப்படும் என்ற முதல்வரின் அறிவிப்பிற்கு அப்பல்லோ மருத்துவமனை வரவேற்பு தெரிவித்துள்ளது.
சென்னை: ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க ஆணையம் அமைக்கப்படும் என்ற முதல்வர் பழனிச்சாமியின் அறிவிப்பிற்கு அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் வரவேற்பு தெரிவித்துள்ளது.
தமிழக முதல்வர் பழனிச்சாமி, ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க ஆணையம் அமைக்கப்படும் என்று இன்று திடீரென அறிவித்தார். இந்த அறிவிப்பு ஓபிஎஸ் அணியுடன் ஈபிஎஸ் அணி இணைவதற்காகவே என்று அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.

இந்நிலையில், 70 நாட்களுக்கும் மேலாக ஜெயலலிதாவிற்குச் சிகிச்சை அளித்த அப்பல்லோ மருத்துவமனை முதல்வர் பழனிச்சாமியின் அறிவிப்பிற்கு வரவேற்பு தெரிவித்துள்ளது. இந்த விசாரணையின் மூலம் மருத்துவமனை, ஜெயலலிதாவிற்குச் சிறப்பான சிகிச்சை அளித்ததும் வெளியே வரும் என்று மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மேலும், ஜெயலலிதாவிற்கு மிகச் சிறப்பான மருத்துவ சிகிச்சை அளித்தும் காப்பாற்ற முடியாமல் போய்விட்டது என்று தெரிவித்துள்ள அப்பல்லோ மருத்துவமனை, அவரது மரணம் குறித்து பேசப்படும் பல்வேறு ஊகங்களுக்கு விசாரணை ஆணையத்தின் மூலம் முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications