ஓ.பி.எஸ்.. நீங்கள் தோற்றாலும் வென்றவரே..!
சென்னை: முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்துக்கு பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர ராவ் முதலில் பெரும்பான்மையை நிரூபிக்க ஆதரவு தருகிறாரோ இல்லையோ அல்லது ஓ.பி.எஸ் நம்பிக்கை வாக்கெடுப்பில் வெல்கிறாரோ இல்லையோ, அவருக்கு நிச்சயம் இது தோல்வியே கிடையாது. மாறாக வெற்றிதான்.
ஓ.பன்னீர் செல்வத்தை எதற்குப் பாராட்டுகிறோமோ இல்லையோ இந்த ஒரே ஒரு காரணத்துக்காக ஒட்டுமொத்த தமிழ் மக்களும் உளமாற பாராட்டுவார்கள், தலைமுறைக்கும் வாழ்த்தி மகிழ்வார்கள்.. அது சசிகலாவை முதல்வராக விடாமல் தடுத்த அவரது அதிரடி தைரியத்திற்காக.

சசிகலாவை முதல்வராக கனவிலும் கூட நினைத்துப் பார்க்க முடியவில்லை தமிழக மக்களால். சசிகலா எப்போது முதல்வர் பதவியை நோக்கி நகர ஆரம்பித்தாரோ அன்றே தூக்கம் தொலைத்தது தமிழ் கூறும் நல்லுலகம். யாராலும் அதை ஜீரணிக்கவே முடியவில்லை. எப்படி இதைத் தடுக்கப் போகிறோம் என்ற மன உளைச்சலில் சிக்கித் தவித்தனர் தமிழ் மக்கள்.
முதல்வர் பதவிக்கு கைக்கெட்டும் தூரத்தில் அவர் நெருங்கி விட்டபோது துடிக்காத தமிழர்களே இல்லை. அந்த நேரத்தில்தான் பொங்கி எழுந்தார் ஓ.பன்னீர் செல்வம். அப்படியே ஒட்டுமொத்த தமிழக மக்களின் நெஞ்சங்களையும் கொள்ளை கொண்டு விட்டார்.
அதிமுகவில் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா தாண்டி ஒரு தலைவருக்கு இப்படி ஒரு ஆதரவு கிடைத்ததில்லை என்று கூறும் அளவுக்கு ஓ.பி.எஸ்ஸுக்கு மிகப் பெரிய ஆதரவு கட்சியினரிடையே கிடைத்தது. அதை விட தமிழ் மக்களின் மனதில் மிகப் பெரிய ஹீரோவாக உயர்ந்து நின்றார் ஓ.பி.எஸ்.
சசிகலாவை தடுத்து நிறுத்தி தமிழ் மக்கள் தலைக் குனிவைச் சந்திக்காமல் காத்து தடுத்த ஓ.பி.எஸ்ஸை நிச்சயம் எவ்வளவு பாராட்டினாலும் அது தகும். அவருக்குப் பின்னணியில் யார் உள்ளனர் என்பதெல்லாம் அடுத்துதான். ஆனால் சசிகாலவை தடுத்து நிறுத்திய அந்த ஒரே ஒரு காரணம் மட்டும் போதும் ஓ.பி.எஸ்ஸைப் பாராட்ட.
மக்களின் ஆதரவு நிச்சயம் எப்போதும் ஓ.பிஎஸ்ஸுக்கே என்பதில் எந்த சந்தேகமும் கிடையாது. நாளையே தேர்தல் வந்தால் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அமையும் அமைச்சரவையில் இடம் பெறும் அமைச்சர்களுக்கோ அல்லது அவருக்கு ஆதரவு தரப் போகும் எம்எல்ஏக்களுக்கோ டெபாசிட் கூட கிடைக்காது என்பதை இப்போது அடித்துச் சொல்லி விடலாம்.
ஓ.பி.எஸ். சார்.. ஒரு வேளை நீங்கள் தோற்றாலும் வென்றவரே.. மக்கள் மனதில் நின்றது நீங்கள் மட்டும்தான்!
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications