சட்டசபையின் பெரும்பான்மை கணக்கு கூட தெரியாமல்தான் ஆளுநர் உள்ளாரா? ஸ்டாலின் கேள்வி
சென்னை: கொல்லைப்புறம் வழியாக ஆட்சிக்கு வர என்றைக்குமே திமுக தயாராக இல்லை என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னையில் நடந்த திருமண விழாவில் ஸ்டாலின் பேசியதாவது: தமிழக அரசை மாற்ற வேண்டும் என்ற எண்ணம் அனைவரிடமும் உள்ளது. எப்போது ஆட்சி அகற்றப்படும் என்ற எண்ணம் எல்லோரிடமும் ஏற்பட்டுள்ளது.

எடப்பாடி பழனிசாமி அரசை பெரும்பான்மை நிரூபிக்க வேண்டும் எனக் கேட்டு ஆளுநரை சந்தித்தோம். தேவையேற்பட்டால் குடியரசு தலைவரை மீண்டும் சந்திப்போம். இன்று மாலை ஆளுநரை மீண்டும் சந்திக்க உள்ளோம். அப்போது ஜனநாயகத்தை காப்பாற்ற வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைப்போம்.
எதிர்க்கட்சி எம்எம்எல்ஏக்களை சேர்த்து ஆளுங்கட்சிக்கு 119 எம்எல்ஏக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். பெரும்பான்மையை அரசு இழந்துவிட்டது அப்பட்டமாக தெரிகிறது. ஆனாலும் ஆளுநர் நடவடிக்கை எடுக்காமல் உள்ளார்.
சட்டசபையின் பெரும்பான்மை கணக்கு கூட தெரியாமல்தான் மாநில ஆளுநர் உள்ளாரா? அவருக்கு அனைத்தும் தெரிந்தும், நடவடிக்கை எடுக்காததற்கு மத்திய அரசே காரணம். கொல்லைப்புறம் வழியாக ஆட்சிக்கு வர என்றைக்குமே திமுக தயாராக இல்லை . இவ்வாறு அவர் கூறினார்.
-
தமிழ்நாட்டின் முதல் சட்டமன்ற பெண் செயலாளராக சாந்தி நியமனம்.. யார் இவர்? இவருடைய பவர் என்ன? -
இபிஎஸ் வர்றதுக்குள்ள இப்படியா.. எஸ்.பி.வேலுமணி முகத்துக்கு நேராக துரோகின்னு கத்திய அதிமுக நபர் இவரா? -
ராஜாக்கள் மந்திரியானால் இப்படித்தான்! டி.ஆர்.பி ராஜாவுக்கு எதிராக கிளம்பிய மா.செ.க்கள்! -
அதிமுக பொதுக்குழு பஞ்சாயத்து ஓவர்.. உயர் நீதிமன்றத்தில் வழக்குகளை வாபஸ் பெற்ற எடப்பாடி, ஓபிஎஸ் -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
கதை ஓவர்! அதிமுகவில் இருந்து நீக்கியதை எதிர்த்த மனுவை வாபஸ் பெற அனுமதி கேட்ட ஒபிஎஸ்.. இன்று விசாரணை -
பெரிய புள்ளி.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு! வலையை விரித்த செங்க்ஸ்.. தவெகவுக்கு தாவ தயாரான சிவிஎஸ்! -
திமுக தொண்டர்களுக்கு டபுள் ட்ரீட்.. கருணாநிதியின் 103வது பிறந்தநாள் விழாவில் ஸ்டாலின் மெகா விழா -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
அப்பன் மகனுக்கு சம உரிமை கொடுக்க இது என்ன குடும்ப சொத்தா? கே.என்.நேரு குறித்து திருச்சி சூர்யா -
மேகதாது அணை: முதல்வரானதும் டி.கே.சிவகுமார் அதிரடி! முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாடு இல்லை! -
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம்












Click it and Unblock the Notifications