கணவரை உதறிவிட்டு ஓடிப்போன இளம்பெண்.. கொன்று கிணற்றில் வீசிய இன்ஸ்டாகிராம் காதலன்.. தென்காசியில் ஷாக்
தென்காசி: தென்காசி மாவட்டத்தில் கிணற்றில் இளம்பெண் சடலம் கிடந்த வழக்கில் துப்பு துலங்கியுள்ளது. இளம்பெண்ணை அவரது முன்னாள் காதலனே அடித்துக் கொலை செய்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
திருமணம் ஆன பிறகு சமூக வலைத்தளத்தில் பழகிய முன்னாள் காதலனை நம்பி சென்ற பெண், காதலனால் கொடூரமாக அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் நடபெற்றுள்ளது. இது குறித்த விவரம் வருமாறு: தென்காசி மாவட்டத்தில் உள்ள வலசை கிராமத்தில் உள்ள ஒரு பயன்பாடற்ற ஒரு கிணற்றில் இளம் பெண் உடல் கிடந்தது. இது குறித்து தகவல் கிடைத்ததும் விரைந்து வந்த போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர்.

இளம்பெண் மாயமானதாக எங்கேயேவது புகார் வந்துள்ளதா? எனவும் போலீசார் விசாரித்து வந்தனர். இந்த விசாரணையில், கிணற்றில் பிணமாக மிதந்த இளம்பெண், சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த மாரிமுத்து என்பவரின் மகள் வினோதினி (வயது 19) என்பது தெரியவந்தது. திருமணம் ஆன 4 மாதங்களே ஆன நிலையில் வினோதினியை அவரது முன்னாள் காதலன் மனோ ரஞ்சித் (வயது 22) என்பவர் அடித்துக் கொலை செய்து தனது நண்பர்களுடன் இணைந்து கிணற்றில் வீசியது தெரியவந்தது.
இந்த கொடூர சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:- மனோ ரஞ்சித்தும் வினோதனிக்கும் இடையே சமூக வலைத்தளம் மூலம் அறிமுகம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் இருவரும் ஒருவொருக்கொருவர் காதலித்து உள்ளார்கள். வினோதினி தனது காதலன் பெயரை கையில் பச்சை குத்தியும் வைத்து இருந்து இருக்கிறார். தனது காதலனை நேரில் சென்றும் அவ்வப்போது சந்தித்துள்ளார்.
இதற்கிடையே கடந்த 4 மாதங்களுக்கு முன்பு வினோதினிக்கு வேறு நபருடன் திருமணம் நடைபெற்றது. தனது காதலிக்கு திருமணம் ஆன அதிர்ச்சியில் மனோ ரஞ்சித் பூச்சி மருந்தை குடித்து தற்கொலைக்கு முயற்சித்துள்ளார். பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவர் உடல் நலம் தேறினார். இதற்கு மத்தியில் வினோதினி திருமணம் ஆன பிறகும் தனது முன்னாள் காதலனான மனோ ரஞ்சித்தை தொடர்பு கொண்டு பேசியிருக்கிறார்.
அப்போது, வினோதினி தனது கணவரை விட்டு விட்டு, முன்னாள் காதலன் மனோ ரஞ்சித்தை பார்ப்பதற்காக வலசை கிராமத்திற்கு வந்துள்ளார். இருவரும் ஒரே வீட்டில் தங்கியிருந்துள்ளனர். இதற்கிடையே, வினோதினிக்கு இன்ஸ்டாகிராமில் வேறு சில ஆண் நண்பர்களுடனும் பேசி வந்துள்ளார். இதை அறிந்து கொண்ட மனோ ரஞ்சித், வினோதினியை கண்டித்துள்ளார். இதனால், இருவருக்கும் இடையே சண்டை வந்துள்ளது.
தொடர்ந்து கோபம் அடைந்த மனோ ரஞ்சித் ,வினோதினியை கொலை செய்ய முடிவு செய்துள்ளார். இதற்காக ஆளில்லாத காட்டுப்பகுதிக்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு வைத்து, ஆண் நண்பர்களுடன் பேசுவதை விட்டு விடுமாறு பேசினாராம். அப்போது இருவருக்கும் மோதல் ஏற்படவே, வினோதினியை கம்பால் அடித்துள்ளார். இதில் படுகாயம் அடைந்த வினோதினி, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதையடுத்து மனோ ரஞ்சித் தனது நண்பர்களான மாகா பிரபு, பரத், மணிகண்டன் மற்றும் 17 வயது சிறுவன் ஆகியோருடன் உதவியுடன் உடலை, சாக்குப்பையில் கட்டி கிணற்றில் வீசியிருக்கிறார். இந்த கொலை சம்பவம் தொடர்பாக மனோ ரஞ்சித் மற்றும் அவரது நண்பர்களை கைது செய்த போலீசார் பாளையங்கோட்டை சிறையில் அடைத்தனர்.












Click it and Unblock the Notifications