பேஸ்புக் "தோஸ்த்" கூப்பிட்டார்னு போயிராதீங்க.. இந்தக் கதிக்கு நீங்களும் ஆளாக நேரிடலாம்!
நாமக்கல்: நாமக்கல்லில் பிறந்தநாள் விருந்துக்கு அழைத்து நூதனமான முறையில் நகையைப் பறித்தவர்கள் போலீசாரால் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாமக்கல் மாவட்டம், திருச்சங்கோடு அருகிலுள்ள பள்ளிபாளையத்தைச் சேர்ந்தவர் கணேஷ்.
இவர் பேஸ்புக்கில் நண்பர்கள் தொடர்பு ஏற்ப்படுதுவதில் தீவிர ஆர்வமுடையவர்.
பேஸ்புக்கால் வந்த நட்பு:
இப்படி பேஸ்புக்கில் அறிமுகமான நண்பர்களிடம் தகவல் பரிமாற்றம் செய்து கொண்டத்தில், ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை சேர்ந்த ராஜா என்கிற இளையராஜா என்பவரிடம் தீவிரமாக தொடர்பு கொண்டு பேசி வந்துள்ளார்.
பிறந்தநாள் விழா அழைப்பு:
இந்நிலையில், இளையராஜாவும் அவரது நண்பர்கள் ஐந்து பெரும் சேர்ந்து தங்களுடைய பிறந்த நாள் கொண்டாட்டத்திற்கு வருமாறு கணேசை சத்தியமங்கலத்துக்கு கூப்பிட்டுள்ளனர்.
ஐந்து நண்பர்கள்:
இதனை நம்பிய கணேஷ் புதன்கிழமை சத்தியமங்கலம் சென்றுள்ளார். அங்குசென்ற கணேசை, தேள்கரடு, இளையராஜா, கார்த்தி, சவுந்தர், மாரிமுத்து, ஹரிஹரன் ஆகிய ஐந்து பேரும் சந்தித்துள்ளனர்.
வெளியில் சென்றவர்கள்:
இளையராஜாவுக்கு தனது வாழ்த்துக்களை கூறியுள்ளார் கணேஷ். பின்னர் நண்பர்கள் 6 பேரும் மாரனூர், கீழ்பவானி வாய்க்கால் பாலம் அருகே உள்ள ஒரு இடத்துக்கு சென்றுள்ளனர்.
நகை, பணம் பறிப்பு:
அங்கு சென்றதும் பேஸ்புக் நண்பர்கள் ஐவரும் சேர்ந்து கணேசை மிரட்டி, அவரிடமிருந்து பணம் ரூபாய் 1000, அரை பவுன் மோதிரம், 2 செல்போன்கள் ஆகியவற்றை பறித்துக் கொண்டனர்.
கை செலவுக்கு 100 ரூபாயாம்:
மேலும், இதுகுறித்து யாரிடமும் கூறக்கூடாது என்றும் மிரட்டி அங்கிருந்து கை செலவுக்கு நூறு ரூபாய் பணத்தைக் கொடுத்து அனுப்பியுள்ளனர்.
குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்:
இதுகுறித்து கணேஷ் சத்தியமங்கலம் காவல் துறையினரிடம் புகார் தெரிவித்தார். அதன்பேரில், சம்பவத்தில் தொடர்புடையை 5 பேரையும் காவல் துறையினர் கைது செய்து, சத்தி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications