ரசிகர்கள் நடத்தும் விழாக்களில் ஆடு வெட்ட கூடாது.. ரஜினிக்கு பீட்டா கடிதம்
ரஜினி ரசிகர்கள் நடத்தும் விழாக்களில் ஆடு வெட்ட கூடாது என பீட்டா அமைப்பு கோரிக்கை வைத்து இருக்கிறது.
Recommended Video

சென்னை: ரஜினியின் அரசியல் அறிவிப்பிற்கு பின் அவருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். பல தலைவர்களும் பிரபலங்களும் ரஜினிக்கு பல்வேறு வகைகளில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் பீட்டா அமைப்பும் ரஜினிக்கு கடிதம் எழுதி இருக்கிறது. இந்த கடிதத்தை அவசர கடிதம் என்று குறிப்பிட்டு பீட்டா அனுப்பி இருக்கிறது.
இதில் ரஜினி ரசிகர்கள் நடத்தும் விழாக்களில் ஆடு வெட்ட கூடாது என பீட்டா அமைப்பு கோரிக்கை வைத்து இருக்கிறது.
வாழ்த்து
இதில் ரஜினியை பீட்டா வாழ்த்தி இருக்கிறது. ''உங்களுடைய அரசியல் அறிவிப்பிற்கு வாழ்த்துக்கள். சினிமாவின் வெற்றியை தொடர்ந்து நீங்கள் அரசியலுக்கு வந்து இருப்பதற்கு வாழ்த்துக்கள். உங்களுக்கு இருக்கும் புகழும் பலமும் மக்களுக்கு நல்ல பலனை அளிக்கும் என்று நம்புகிறோம். '' என்று அந்த கடிதத்தில் குறிப்பிட்டு இருக்கிறது.

விழா
ரஜினி ரசிகர்கள் வரும் 7ம் தேதி அழகர்கோவிலில் ரஜினி அரசியல் அறிவிப்பை விழாவாக கொண்டாட இருக்கிறார்கள். இதில் ஆடு வெட்டி சாப்பாடு சமைக்கப்பட இருக்கிறது. இந்த விழாவில் ஆடு வெட்டி கொண்டாட கூடாது என பீட்டா கோரிக்கை வைத்து இருக்கிறது. இதை அவசர விஷயம் என்றும் பீட்டா குறிப்பிட்டு உள்ளது.

சட்டம்
கோவிலில் ஆடு வெட்டி கொண்டாடுவது சட்டத்திற்கு விரோதமானது என்றும் அந்த அமைப்பு குறிப்பிட்டு இருக்கிறது. 2001ல் அரசு வெளியிட்ட ஆணையின்படி இது முழுக்க முழுக்க சட்டத்திற்கு எதிரானது என்று கூறியுள்ளது. எனவே இதை உடனடியாக தடுக்க வேண்டும் என்று அந்த அமைப்பு கோரிக்கை வைத்து இருக்கிறது.

மீண்டும்
ஏற்கனவே ரஜினி தன் ரசிகர்களை சந்தித்த போது இந்த பிரச்சனை எழுந்தது. அப்போது ரஜினியிடம் அவரது ரசிகர்கள் கிடா வெட்டி விருந்து வைக்க சொல்லி இருக்கிறார்கள். அதற்கு பதில் அளித்த ரஜினி ''உங்களுக்கு கிடா வெட்டி விருந்து வைக்க ஆசைதான். ஆனால் ராகவேந்திரா மண்டபத்தில் அசைவத்திற்கு அனுமதி இல்லை'' என்று கூறினார்.
-
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியா? திருமாவளவன் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு! -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெற.. மாணிக்கம் தாகூர் தான் முக்கிய காரணமாம்.. சொல்கிறார் விஸ்வநாதன்! -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
உட்கட்சி பூசலால் திணறும் மம்தா.. முக்கிய மீட்டிங்குக்கு ஆப்சென்ட் ஆன பாதி எம்எல்ஏக்கள்! TMC கதை ஓவர்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்? -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்.. என சொன்ன வள்ளுவர் சனாதனியா? ஆளுநர் மன்னிப்பு கோர வேண்டும் -சிபிஎம் -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா












Click it and Unblock the Notifications