இது ட்வீட் இல்லை தலைவா.. பேதி மாத்திரை.. கமல் ரசிகர்கள் செம கொண்டாட்டம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: இந்தி திணிப்புக்கு என்று குரல் கொடுத்தேனோ அன்றே அரசியலுக்கு வந்துவிட்டேன் என கமலஹாசன் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். மேலும் அரசின் ஊழல் குறித்த விபரங்களை ஆதாரத்துடன் அனுப்புங்கள் என்று ரசிகர்கள் மற்றும் தமிழக மக்களுக்கு நடிகர் கமல் டுவிட்டரில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஜெயக்குமாரோ, எச்.ராஜாவோ நான் ஏற்கனவே அரசியலுக்கு வந்ததை உணராதவர்கள் என்று தெரிவித்தார். மேலும் ஊர் அறிய கைக்கூலி வாங்கி கடமை செய்ய மறந்தவர்கள் என்று அமைச்சர்களுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

கமலின் இந்த அறிக்கையை அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். டிவிட்டரில் குவியும் கமெண்ட்டுகளில் சில உங்கள் பார்வைக்கு..

இங்கோ தலைகீழ்

புத்திசாலியை பகைத்துக்கொள்ளாதே பக்கத்தில் வைத்துக்கொள் என்பார்கள். இங்கோ தலைகீழ். இந்த அரசும் அதைப்பையில் வைத்துக்கொண்டுள்ள கங்காரு பாஜகவும்.. என்கிறது இந்த டிவீட்

Kamal hassan's Riddle Tweets on Politics-Oneindia Tamil

புதிதாக மாற்றம் காணலாம்..

அரசியலுக்கு வராரோ இல்லையோ.. ஒரு நாள் முதல்வன் போல் வந்தால் புதிதாக மாற்றம் காணலாம்.. (எனது தனிப்பட்ட கருத்து) என்கிறது இந்த டிவீட்

காண்டமணி ஓச கேட்டுடிச்சு

ஐயா.. இதுதான் உங்கள் அரசியலுக்கும் மற்றவர்கள் அரசியலுக்கும் உள்ள வித்தியாசம் சொல்லிலும் செயலிலும் கூட நேர்மையான அந்த காண்டமணி ஓச கேட்டுடிச்சு! என்கிறார் இந்த நெட்டிசன்

நல்லா கழுவி ஊத்திட்டீங்க...

நல்லா கழுவி ஊத்திட்டீங்க... இப்ப பாருங்க வரிஞ்சு கட்டிட்டு கூட்டம் கூட்டமா வருவாய்ங்க.. விருமாண்டி யாருனு காட்ட வேண்டிய நேரம் வந்தாச்சு..என்கிறது இந்த டிவீட்

மாண்புமிகு தம்பி,

எலும்பு மருத்துவருக்கும், மாண்புமிகு தம்பி, மற்றும் பலருக்கும் நீங்கள் யாரென்று புரிந்துகொண்டிருப்பார்கள். இதற்குத்தான் காத்திருந்தோம் தலைவா.. என்கிறது இந்த டிவீட்

பேதி மாத்திரை

இது ட்விட் இல்ல தலைவா பேதி மாத்திரை இப்ப பாருங்க அவங்களுக்கு எப்படி வயித்த கலக்கும்னு... என்கிறது இந்த டிவீட்

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Fans welcomes Kamal Hassans political tweet. Last nigh Kamal twitted about his arrival in the politics.
Please Wait while comments are loading...