நிதித்துறை செயலர் சண்முகம் விவசாயிகளை அழிக்க நினைக்கிறார்: அய்யாக்கண்ணு பரபரப்பு குற்றச்சாட்டு

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக நிதித்துறை செயலர் சண்முகம் விவசாயிகளை அழிக்க நினைக்கிறார் என்று தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்க தலைவர் அய்யாக்கண்ணு குற்றம்சாட்டியுள்ளார்.

காவிரி மேலாண்மை வரியம் அமைக்க வேண்டும், பயிர்க்கடன்களை ரத்து செய்ய வேண்டும் என பலகோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக விவசாயிகள் டெல்லியில் 41 நாட்களாகப் போராட்டம் நடத்தி வந்தனர்.

farmer Accusation on Finance Secretary Shanmugam

இதனிடையே முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி விவசாயிகளின் கோரிக்களை நிறைவேற்றித் தருவதாக வாக்குறுதி அளித்ததை அடுத்து அவர்கள் போரடடத்தை தற்காலிகமாக வாபஸ் பெற்றனர். இந்நிலையில் தமிழக நிதித்துறை செயலளரை சந்திக்க விவசாயிகள் பிரதிநிதிகளுடன் அய்யாக்கண்ணு இன்று தலைமை செயலகம் வந்திருந்தார்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், நிதித்துறை செயலரை சந்திக்க வந்தோம். ஆனால் அவர் எங்களை 2 மணி நேரம் காக்க வைத்து விட்டு சந்திக்காமல் திருப்பி அனுப்பி விட்டார் என்று கூறிய அய்யாக்கண்ணு, நிதித்துறை செயலர் சண்முகம் விவசாயிகளை அழிக்க நினைக்கிறார் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் அரசு அதிகாரிகள் விவசாயிகளை மதிக்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்தார்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Ayyakannu has Accusation on tamilnadu Finance Secretary Shanmugam to over the farmer's issue
Please Wait while comments are loading...