கடன் வாங்கி சாகுபடி செய்த பயிர்கள் கருகி நாசம்.. மனம் உடைந்த விவசாயி விஷம் குடித்து தற்கொலை
கடன் வாங்கி பயிர் சாகுபடி செய்த பயிர்கள் கருகி நாசமாகின. இதனால் மனம் உடைந்த விவசாயி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
தேனி: நீர் இன்றி பயிர்கள் காய்ந்து வருவதால் விவசாயிகள் மரணம் செய்து கொள்வது தொடர்கதையாக மாறிவிட்டது. இன்றும் தேனியில் விவசாயம் பொய்த்துப் போனதால் விவசாயி ஒருவர் விஷம் குடித்து தற்கொலை செய்துக் கொண்டார்.
கர்நாடகத்தில் இருந்து தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய காவிரி நீர் கிடைக்கவில்லை. தமிழகத்தை வடகிழக்கு பருவ மழையும் பழிவாங்கி விட்டது. இதனால் தமிழகம் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த வறட்சிக்கு விவசாயிகள் பலியாவது தொடர்ந்து வருகிறது.

இன்று காலை, தேனி மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயி ஒருவர் பயிர் கருகிய மன உலைச்சலில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். தேனி அருகில் எருமலைநாயக்கன்பட்டியில் வசித்து வந்த விவசாயி மங்கலஈஸ்வரன் தற்கொலை செய்து கொண்டது உறவினர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
52 வயதான இவர் கடன் வாங்கி பயிர் சாகுபடி செய்திருந்தார். நீரின்றி பயிர்கள் கருகியதால் வாங்கியக் கடனைக் கூட கட்ட முடியாமல் போய்விட்டதே என்ற மனக் கவலையில் வயலில் தெளிக்க வாங்கி வைத்திருந்த மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டதாக உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications