பவானி ஆற்றின் குறுக்கே தடுப்பணை... ஈரோடு, கோவையில் விவசாயிகள் உண்ணாவிரதப் போராட்டம்
பவானி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டி வரும் கேரள அரசைக் கண்டித்து ஈரோடு மற்றும் கோவையில் விவசாயிகள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.
கோவை/ ஈரோடு: பவானி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டி வரும் கேரள அரசைக் கண்டித்தும் அதை தடுக்க தவறிய தமிழக அரசைக் கண்டித்தும் ஈரோடு மற்றும் கோவையில் விவசாயிகள் ஒருநாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பவானி ஆற்றின் குறுக்கே கேரள அரசு தடுப்பணை கட்டுவதால் கொங்கு மண்டலத்தில் 3 லட்சம் ஏக்கர் விவசாயப் பயிர்கள் நாசமாகிவிடும் என்றும் மக்களின் குடிநீர் ஆதாரம் கேள்விக்குறியாகிவிடும் என்றும் பொதுமக்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் பவானி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டி வரும் கேரள அரசுக்கு சப்ரீம்கோர்ட் தடை உத்தரவு பிறப்பித்தது. மேலும் அந்த தடையாணையை இதுவரை தமிழக அரசு பெறாததைக் கண்டித்தும், காவிரி மேலாண்மை அமைக்கக் கோரியும் ஈரோடு மாவட்டம் சென்னிமலையில் பவானி தடுப்பணை தடுப்புக் குழு சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்று வருகிறது. இதில் 300-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டு மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர்.
அதேபோல் கோவையில் டாடாபாத் என்ற இடத்தில் விவசாயிகள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். விவசாயிகளுக்கு ஆதரவாக திமுக, தமாக, விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சியினரும் உண்ணாவிரத்தில் பங்கேற்றுள்ளனர்.


Click it and Unblock the Notifications
