விவசாய கடன் வட்டி சலுகை திடீர் ரத்து - விவசாயிகள் பரிதவிப்பு
நெல்லை: விவசாயிகளுக்கு வங்கிகளில் வழங்கப்படும் கடன்களுக்கு திடீரென வட்டி சலுகை ரத்து செய்யப்பட்டதால் அவர்கள் திணறி வருகினறனர்.
விவசாயிகள் தங்கள தொழிலை அபிவிருத்தி செய்வதற்காக வங்கிகளில் நகைகளை அடகு வைதது கடன் பெறுகின்றனர். இந்த நிலையில் விவசாயிகள் வட்டி மானியத்திற்காக கடந்த பட்ஜெட்டில் நிதி ஒதுக்காததால் அவர்கள் வட்டி சலுகை ரத்து செயயப்பட்டுளளது.

வட்டி சலுகை ரத்தால் பலர் கடன் பெற முடியாமல் தவித்து வருகின்றனர். இந்தியாவின் முக்கிய தொழிலாக விவசாயம் இருந்து வருகிறது. இதனால் விவசாயிகளுக்கு கடன் வடடி சலுகை, கடன் வட்டி தள்ளுபடி, இலவச மின்சாரம் உள்பட பல்வேறு சலுகைகள் வழங்கப்படுகிறது.
விவசாயிகளை பொறுத்தவரை ஒரு ஆண்டுக்கு இரண்டு முறை பயிர் செய்கின்றனர். வடகிழககு, தெனமேற்கு பருவமழை காலத்தில் பயிர் சாகுபடி நடக்கும்.
இந்த காலத்தின் போது விவசாயிகளுக்கு உதவும் நோக்கத்தில் குறுகிய கால கடனாக நகை ஈட்டின் பேரில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் மறறும் கூட்டுறவு வங்கிகளில நகை கடன் வழங்கப்படுகிறது.
குறுகிய கால நகை கடனுக்கு 7 சதவீதம் வட்டி வசூலிக்கப்பட்டு வருகிறது. இதற்கு மத்திய அரசு 4 சதவீதமும், மாநில அரசு 3 சதவீதமும் மானியம் வழங்குகி்ன்றன.
இந்த வட்டி சலுகைக்காக மத்திய பட்ஜெட்டில் ஒவ்வொரு ஆண்டும் நிதி ஒதுக்கப்படும். இந்த நிலையில் கடந்த பட்ஜெட்டில் விவசாயிகளுக்கு வழங்கப்படும் கடன் வட்டி மானியத்திற்கு நிதி ஒதுக்கப்படவில்லை.
இதையடுத்து ஏப்ரல் மாதம் 1 ஆம் தேதி முதல் குறுகிய கால பயிர் கடனாக நகை கடனுக்கு வழங்கப்படும் வடடி விகிதத்தை தேசியமாக்கப்படட வங்கிகள் உயர்த்தியுள்ளன. இதனால் விவசாயிகள் கடன் தொகையையும், அதற்குரிய வட்டியையும் கட்ட முடியாமல் திணறி வருகின்றனர்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications