"ஆசையா இருந்துச்சு..ப்பா".. கதறிய மகள்.. ஓடிச்சென்று அரிவாளை தூக்கி வந்த அப்பா.. திணறிய தென்காசி
மகளை வெட்டி கொன்ற தந்தையை போலீசார் கைது செய்தனர்
தென்காசி: காதலித்து திருமணம் செய்தால், அந்த பெண்ணை, அவரது அப்பாவும், சொந்தக்காரர்களும் சேர்ந்து கொலை செய்வது நடக்கக்கூடிய சம்பவம்தான்.. ஆனால், சொந்தக்காரரை காதலித்ததுக்காக அப்பாவே மகளை கொலை செய்த சம்பவம் தூக்கி வாரிப்போட்டுள்ளது.
தென்காசி மாவட்டம் ஊத்துமலை அருகே உள்ளது தெற்கு காவலாகுறிச்சி என்ற கிராமம்.. இங்கு வசித்து வந்தவர் மாரிமுத்து.. இவர் ஒரு விவசாய கூலி தொழிலாளி.. இவரது மகள் ஷாலோம் ஷீபா.. இவர் 2 வருடங்களாக முத்துராஜ் என்பவரை காதலித்து வந்துள்ளார். முத்துராஜ் இவர்களுக்கு உறவினர்தான்.
இந்த விஷயம் வீட்டுக்கு தெரியவந்தது.. இது தெரிந்ததும் 2 வீட்டிலேயும் கொந்தளித்து உள்ளனர்.. சொந்தம்தானே, எப்படியாவது கல்யாணம் செய்து வைத்துவிடுவார்கள் என்ற நம்பிக்கையில்தான் காதலர்கள் இருந்துள்ளனர்.. ஆனால் ஆளுக்கு ஒரு பக்கம் குடும்பத்தினர் குதிக்கவும், வேறு வழியில்லாமல் வீட்டை விட்டு வெளியேறி விட்டனர்.

ஜோடி
விடுவார்களா பெற்றோர்கள்?... இந்த ஜோடியை தேடி கண்டுபிடித்து, பிரித்து தங்கள் வீட்டுக்கு அழைத்து வந்துவிட்டார்கள்.. இரண்டு பேரையுமே வீட்டுக்குள் கட்டுப்பாடுடன் வைத்திருக்கிறார்கள்.. ஒருவரையொருவர் பார்க்க அனுமதியும் இல்லை.. இதனால் பொறுமை இழந்த காதலர்கள், 6 மாதத்துக்கு முன்பு வீட்டை விட்டு ஓடிப்போய், ரிஜிஸ்தர் கல்யாணம் செய்து கொண்டனர்.. வெளியூரில் ஒரு வீடு எடுத்து இருவரும் வாழ்ந்து வந்துள்ளனர்..

திருவிழா
இந்நிலையில்தான், இவர்களின் சொந்த ஊரில் உள்ள மாரியம்மன் கோயில் விழா நடந்துள்ளது.. எப்பவுமே இந்த திருவிழாவில் குடும்பத்துடன் இவர்கள் எல்லாருமே சேர்ந்து கலந்து கொள்வது வழக்கம்.. ஊரில் திருவிழா நடக்கறது என்று கேள்விப்பட்டதுமே இந்த ஜோடிக்கு ஆர்வம் பெருக்கெடுத்தது.. அதனால் கிளம்பி வந்து, முத்துராஜின் வீட்டில் தங்கியுள்ளனர்.

முத்துராஜ்
முத்துராஜ் பெற்றோர் எந்தவித கோபத்தையும் காட்டவில்லை.. மகன் திரும்பி வந்ததே போதும் என்று மகிழ்ந்தனர்.. இதைபார்த்ததும் ஷீபாவுக்கும் ஆசை துளிர்த்தது... ஒருவேளை தன்னை பார்த்தாலும், அப்பா, அம்மா மனம் மாறிவிடும் என்று நினைத்து, ஆசையுடன் பெற்றோரை பார்க்க சென்றார். வீட்டில் ஷீபாவின் அப்பா இருந்தார்.. மகளை பார்த்ததும் டென்ஷன் ஆகிவிட்டார்.

அரிவாள்
வீட்டுக்குள் வரக்கூடாது என்று வாசற்படியிலேயே நிற்க வைத்து தடுத்துள்ளார்.. இது தகராறாக மாறி உள்ளது. "உங்களை பார்க்க ஆசை ஆசையா வந்திருக்கேன்..ப்பா.. என்னை ஏத்துக்குங்க" என்று மகள் சமாதானம் செய்ய முயன்றும், அதை மாரிமுத்து கேட்க தயாராக இல்லை.. வீட்டுக்குள் ஓடிச்சென்று அரிவாளை எடுத்து வந்து ஷீபாவை சரமாரியாக வெட்டிவிட்டார்.. இதனால், அவரது அலறல் கேட்டு அக்கம்பக்கத்தினர் திரண்டு வந்து, ஷீபாவை தூக்கி கொண்டு ஆஸ்பத்திரி ஓடினார்கள்..

கைது
ஆனால் ஷீபா இறந்துவிட்டார். அம்மா, அப்பாவை பார்த்துட்டு வரேன்னு சொல்லி சென்ற மனைவியை, ரத்த வெள்ளத்தில் சடலமாக பார்த்ததும், முத்துராஜ் கதறி கதறி அழுதார்.. இந்த வழக்கு தொடர்பாக ஊத்துமலை போலீஸார், மாரிமுத்துவை கைது செய்துள்ளனர்.. விசாரணை நடக்கிறது. ஆணவ கொலையை போலவே இப்படி ஒரு கொலை நடந்துள்ளது தென்காசியையே திணறடித்து வருகிறது.


Click it and Unblock the Notifications
