ராஜபாளையம் அருகே பாலிதீன் நிறுவனத்தில் தீ விபத்து.. பல கோடி மதிப்புள்ள பொருட்கள் கருகின
ராஜபாளையம் அருகே பாலிதீன் தயாரிப்பு நிறுவனத்தில்தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
ராஜபாளையம்: ராஜபாளையம் அருகே பாலிதீன் தயாரிப்பு நிறுவனத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் பல கோடி மதிப்புள்ள பொருட்கள் எரிந்து கருகின.
ராஜபாளையம் அருகே உள்ளது ஆசிலாபுரம். இங்கு பாலிதீன் தயாரிப்பு நிறுவனம் ஒன்று பெரிய அளவில் செயல்பட்டு வருகிறது. அதனால் பாலிதீன் பைகள் தயார் செய்யப்பட்டு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இங்கு சுமார் 1200-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிபுரிந்து வருகிறார்கள்.

இந்நிலையில் இன்று காலை 7.30 மணியளவில் இந்த நிறுவனத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. பாலிதீன் பைகள் என்பதால் தீ கொழுந்துவிட்டு எரிய தொடங்கியது. இது அருகிலிருந்த குடோனுக்கும் பரவியது. மளமளவென எரிந்த இநத் தீயில் இதில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து கருகியதாக கூறப்படுகிறது. அவை பல கோடி ரூபாய் மதிப்பிலான பாலிதீன் பைகள் என கூறப்படுகிறது.
தீ விபத்துக்கான காரணம் உடனடியாக தெரியவில்லை. இந்த தீ விபத்து குறித்து உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. ராஜபாளையம், ஸ்ரீவில்லிப்புத்தூர் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து 3 தீயணைப்பு வாகனங்களில் வீரர்கள் விரைவாக வந்து செயல்பட்டனர். ஆனாலும் இவ்வளவு நேரம் போராடியும் தீயை முழுமையாக அணைக்க முடியவில்லை.

தற்போதுவரை அது கொழுந்துவிட்டு எரிந்துகொண்டுதான் இருக்கிறது. இதனால் பல கிலோ மீட்டர் தொலைவுக்கு கரும்புகை சூழ்ந்துள்ளது. இதனால் தீயணைப்பு துறையினருக்கு டேங்கர் லாரிகளிலும் தண்ணீர் கொண்டு வந்து கொடுக்கப்பட்டு வருகிறது.
ஊழியர்கள் யாரும் பணியில் இல்லாத நிலையில், காலையிலேயே தீ விபத்து நடைபெற்றுவிட்டதால், அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறவில்லை. எனினும் தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்க போராடி வருகிறார்கள். இதனால் அங்கு பதட்டம் ஏற்பட்டுள்ளது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications