சென்னை புதுப்பேட்டை ரம்ஜான் வழிபாட்டு பந்தலில் தீ விபத்து
சென்னை புதுப்பேட்டை ஆதித்தனார் சாலையில் ரம்ஜான் நோன்பு வழிபாட்டு கொட்டகையில் தீ விபத்து ஏற்பட்டது.
சென்னை: புதுப்பேட்டையில் புதுப்பேட்டை வீரபத்திரன் தெருவில் 3 மாடி கட்டிடத்தின் மாடியில் தீ பிடித்தது. ரம்ஜான் நோன்பு வழிபாட்டுக்காக போடப்பட்ட கொட்டகையில் தீ விபத்து ஏற்பட்டது. உடனடியாக தீ அணைக்கப்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
புதுப்பேட்டை வீரபத்திரன் தெருவில் உள்ள மூன்று மாடிக்கட்டிடத்தின் மாடியில் ரம்ஜான் நோன்பு வழிபாடு நடத்துவதற்காக கொட்டகை போடப்பட்டுள்ளது. இன்று காலையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

தீயணைப்பு படையினருக்கு தகவல் அளித்த பொதுமக்கள் உடனடியாக தீயை அணைக்கும் முயற்சியில் ஏற்பட்டனர்.
தீயணைப்பு துறையினர் வந்து தீயை அணைத்ததால் பெரும் விபத்து தடுக்கப்பட்டது.
புதுப்பேட்டையில் இரு சக்கர, நான்கு சக்கர வாகன உதிரி பாகங்கள் விற்பனை செய்யும் கடைகள் அதிகம் உள்ளன. இந்த இடத்தில் மூன்று மாடி கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் கடந்த 31ஆம் தேதி சென்னை சில்க்ஸ் கட்டிடம் தீ பிடித்தது. இதை தொடர்ந்து புரசைவாக்கம் ஷாப்பிங் மால் தீ பிடித்து எரிந்தது. அனல் மின் நிலையத்தில் தீ விபத்து, இன்று புதுப்பேட்டையில் மூன்று மாடி கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்டு வருவதால் பொதுமக்களிடையே ஒருவித பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications