3வது முறையாக சிறுதாவூர் பங்களாவில் தீ விபத்து.. தீயணைப்பு படையினர் விரைவு
சிறுதாவூர் கிராமத்தில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா தங்கி இருந்த பங்களாவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
காஞ்சிபுரம்: சிறுதாவூர் கிராமத்தில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா தங்கி இருந்த பங்களாவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
மறைந்த முதல்வர் ஜெயலலிதா தங்கி ஓய்வெடுத்த பங்களாக்களில் முக்கியமானது காஞ்சிபுரம் மாவட்டம் திருப்போரூர் அருகில் உள்ள சிறுதாவூர் கிராமத்தில் உள்ள பங்களா. இதில் பலமுறை ஜெயலலிதா தங்கி ஓய்வெடுத்துள்ளார்.

அவர் தனது தோழி சசிகலாவுடன் தங்கி ஓய்வெடுத்துள்ளார். சுமார் 200 ஏக்கர் பரப்பளவில் சவுக்குமரங்கள் மற்றும் வயல்வெளிகள் இந்த பங்களா அருகில் உள்ளது. இந்நிலையில், இன்று பங்களாவில் உள்ள ஒரு பகுதியில் திடீரென தீப்பற்றி உள்ளது.
இந்த தீ மிகவும் பெரிய அளவில் பரவி வருகிறது. தீயை அணைக்க தீயணைப்பு படையினர் விரைந்துள்ளனர். அருகில் உள்ள காடுகளுக்கு தீ பரவாத வகையில் தீயை அணைக்க முயற்சித்து வருகிறார்கள்.
கடந்த வருடம் இதே சிறுதாவூர் பங்களாவில் இரன்டு முறை தீ விபத்து ஏற்பட்டது. இப்போது மூன்றாவது முறையாக அங்கு தீ விபத்து ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications