கூடங்குளம் உலைக்கு எதிரான போராட்ட செய்திகளை அனுப்பி வந்தவரின் கடை தீயில் எரிந்து நாசம்- சதி?
இடிந்தகரை: கூடங்குளம் அணு உலைக்கு எதிரான போராட்ட செய்திகளை அனுப்பி வந்தவரின் கடை தீயில் எரிந்து நாசமானது. இந்த தீ விபத்தின் பின்னணியில் சதி செயல் இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
இடிந்தகரையில் இருந்து இணையத்தின் மூலமாக கூடங்குளம் செய்திகளை அந்தோணி கேபிஸ்டன் பெர்னாண்டோ என்பவர் அனுப்பி வருகிறார்.

இன்று அதிகாலை மூன்று மணி அளவில் கேபிஸ்டன் தன்னுடைய கடையின் மேல் பகுதியில் குடும்பத்துடன் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென்று மூச்சு திணறியதால் விழித்து பார்த்தபோது கடை தீயில் எரிந்து கொண்டிருந்தது. உடனே தன் மனைவி மற்றும் மூன்று குழந்தைகளையும் தட்டி எழுப்பி பாதுகாப்பாக வேறு இடத்திற்கு அழைத்துச் சென்று உயிர் தப்பினார்.
இதில் கடையில் வைத்திருந்த ரூபாய் 53,000 பணம் எரிந்து நாசமானது. மேலும் சுமார் 5 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்களும் எரிந்து நாசமாகியது. அணு உலைப் போராட்டத்தை எதிர்க்கும் அதிகாரிகளோ அல்லது வெளியூர் நபர்களோ இந்த நாச வேலையை செய்திருக்கலாம் என அப்பகுதி மக்களால் சந்தேகிக்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications