சென்னையில் பரபரப்பு.. ஓடும் ஆம்னி பஸ்ஸில் திடீர் தீ.. பயணிகள் இல்லாததால் பேராபத்து தவிர்ப்பு!
சென்னை: சென்னையில் பயணிகளை இறக்கி விட்டு விட்டு காலியாக வந்த ஆம்னி பேருந்தில் திடீரென தீவிபத்து ஏற்பட்டது. அதிர்ஷ்டவசமாக யாரும் இல்லாததால் உயிர்ச் சேதம் தவிர்க்கப்பட்டது.
சென்னை வியாசர்பாடி சத்தியமூர்த்தி நகர் பேசின்பிரிட்ஜ் நெடுஞ்சாலையில் நேற்று மதியம் தனியார் ஆம்னி பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. பஸ்சை தரமணியைச் சேர்ந்த சண்முகநதி (35) என்பவர் ஓட்டி வந்தார். பேருந்து வியாசர்பாடி பில்லர் அருகே சென்று கொண்டிருந்தபோது அதிலிருந்து இருந்து திடீரென புகை கிளம்பியது. இதை பார்த்த டிரைவர் உடனே சாலையோரமாக நிறுத்திவிட்டு கீழே இறங்கி விட்டார்.
பேருந்தின் பின்புறத்தில் பிடித்த தீ அப்பகுதி முழுவதும் பரவத்தொடங்கியது. இதில் பின்புற இருக்கைகள் அனைத்தும் தீயில் கருகின. உடனே இது குறித்து தீயணைப்பு படையினருக்கு தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் வியாசர்பாடி, சத்தியமூர்த்தி நகர் ஆகிய இடங்களில் இருந்து 2 வண்டிகளில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
இந்த சம்பவத்தால் அப்பகுதியில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. தீ விபத்து குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டதில், பேருந்தில் ஏற்பட்ட மின்கசிவே காரணம் என தெரிய வந்தது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications