சென்னையில், அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து
சென்னை: சென்னையில் அடுக்குமாடி குடியிருப்பில் நேற்று ஏற்பட்ட பயங்கரத் தீ விபத்தில் மூன்று மாடியில் உள்ள வீடுகள் பலத்த சேதாரம் அடைந்தன. தீயணைப்பு வீரர்கள் நான்கு வண்டிகளில் வந்து போராடி தீயை அணைத்தனர். உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை கீழ்ப்பாக்கம் ஆம்ஸ் சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் நேற்று மதியம் திடீரென்று தீப்பிடித்தது. அக்குடியிருப்பின் 5-வது மாடியில் பிடித்த தீ 6, 7-வது மாடிக்கும் வேகமாக பரவியது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், மொத்தம் 4 தீயணைப்பு வண்டிகள் மூலம் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
தீயணைப்பு வீரர்களின் பெரும் முயற்சிக்குப் பிறகு தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. தீ பரவ ஆரம்பித்த உடன் முன்னெச்சரிக்கையாக வீடுகளில் இருந்த சிலிண்டர் அப்புறப்படுத்தப் பட்டதால் சேதாரம் பெரிய அளவில் இல்லை என அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும், இந்த தீ விபத்தில் சிக்கி யாருக்கும் பலத்த தீக்காயம் ஏற்படவில்லை. குளிர்சாதரப் பெட்டியில் ஏற்பட்ட மின்கசிவே விபத்திற்குக் காரணமாக இருக்கலாம் எனச் சொல்லப் படுகிறது.












Click it and Unblock the Notifications