சென்னை குறளகத்தில் திடீர் தீ... உடனடியாக அணைக்கப்பட்டதால் பெரும் சேதம் தவிர்ப்பு
சென்னை: சென்னை பாரிமுனை பகுதியில் உள்ள அரசு கட்டடமான குறளகத்தில் இன்று அதிகாலையில் திடீர் தீவிபத்து ஏற்பட்டது. உடனடியாக விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்து விட்டதால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது.
பாரிமுனை, என்.எஸ்.சி. போஸ் சாலையில் 5 மாடிகள் கொண்ட குறளகம் அரசு கட்டடம் உள்ளது. இதில் கோ-ஆப் டெக்ஸ், ஆவின், காதி கிராப்ட் உள்ளிட்ட பல்வேறு அரசு அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. இன்று அதிகாலையில், 4வது மாடியில் உள்ள எல்காட் நிறுவன சர்வே அலுவலக அறையின் வெளிப்புறம் இருந்த ஏ.சி. எந்திரத்தின் பெட்டியில் திடீரென தீப்பிடித்தது.

சிறிது நேரத்தில் தீ மளமளவென பரவி கொளுந்துவிட்டு எரிந்தது. கரும்புகையும் வெளியேறியது. இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். உயர்நீதிமன்ற தீயணைப்புப் படையினர் விரைவாக வந்து தீயை அணைத்தனர். சிறிது நேரத்தில் தீ அணைக்கப்பட்டு விட்டது. இதனால் அறைக்குள் தீ பரவாமல் தடுக்கப்பட்டு விட்டது. பெரும் சேதமும் தவிர்க்கபப்ட்டது.
அதிகாலையில் நடந்த விபத்து என்பதாலும், இன்று அரசு விடுமுறை என்பதாலும் அசம்பாவிதமும் தவிர்க்கப்பட்டது. மின்கசிவு காரணமாக தீவிபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
சென்னை உட்பட.. 26 மாவட்டங்களை லிஸ்ட் போட்ட வானிலை மையம்! ஆட்டம் ஆரம்பம்! கனமழை வெளுக்கப்போகுது! -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு?












Click it and Unblock the Notifications