மண்ணிலே ஈரம் உண்டு.. பிளஸ்2வில் முதலிடம்.. விபத்தில் குடும்பத்தையே இழந்த மாணவி அமுதா.. உதவிய மக்கள்
சேலம்: விபத்தில் குடும்பத்தில் உள்ள அனைவரையும் இழந்த பள்ளியில் முதலிடம் பிடித்த மாணவி அமுதா என்பவர் உயர் கல்விக்காக அரசின் உதவியை எதிர்நோக்கி காத்திருந்தார். அவருக்கு திமுகவினர் உதவி செய்து உள்ளனர்.
12ம் வகுப்பு தேர்வில் முதலிடம் பிடித்த மாணவியை பலருக்கும் தெரியும். அவருக்கு பலரும் உதவிகள் செய்தனர். பாராட்டினார்கள். இவை எல்லாம் மாணவிக்கு மிகவும் ஊக்கம் தரும் விஷயம்.

அதேநேரம் வறுமையில் படித்து வாழ்வில் முன்னேறுவதற்கான வழிகள் இல்லாத எத்தனையே மாணவிகள் இங்கு இருக்கிறார்கள். அவர்களை தேடி கண்டுபிடித்து அவர்களுக்கு உதவ வேண்டும்என்ற கோரிக்கை நீண்ட காலமாகவே உள்ளது.
ஏழை மாணவிகளின் கனவே உயர் கல்வி கற்க வேண்டும் என்பது தான். ஆனால் அவர்களுக்கு வசதி இல்லாதது ஒருபுறம் எனில், அதற்கான வாய்ப்புகளை எப்படி தேடுவது என்பது தெரியாமல் போவது பெரும் சோகம். அதனால் உயர் கல்வி படிக்காமல் போனவர்கள் மிக அதிகம்.

சரி விஷயத்திற்கு வருவோம். சேலம் அருகே விபத்தில் குடும்பத்தின் அனைவரையும் இழந்த பள்ளியில் முதலிடம் பிடித்த மாணவி அமுதா என்பவர் உயர் கல்விக்காக அரசின் உதவியை எதிர்நோக்கி காத்திருக்கிறார். அவருக்கு உதவ வேண்டும் என்று அப்பகுதி மக்களிடம் இருந்து கோரிக்கை எழுந்துள்ளது.
சேலம் மாவட்டம் இளம்பிள்ளை அருகே கல்பாரப்பட்டியை சேர்ந்த அரசுப்பள்ளி மாணவி அமுதா, பிளஸ் 2 தேர்வில் 584 மதிப்பெண்ணுடன் பள்ளியில் முதலிடம் பிடித்தார்.

ஆனால் துரதிஷ்டவசமாக விபத்தில் தாய், தந்தை, சகோதரியை இழந்த அமுதா, தற்போது உயர்கல்வி படிக்க அரசின் உதவியை எதிர்நோக்கி உள்ளார். கடந்த 6ம் தேதி அமுதாவின் தந்தை வெங்கடாசலம்,தாய் மாரியம்மாள், மூத்த சகோதரி பூங்கொடி மூவரும் சாலை விபத்தில் உயிரிழந்தனர்.
இதனிடையே மாணவி அமுதாவை கல்லூரியில் சேர்க்க திமுகவைச் சேர்ந்த டாக்டர் ஏகே தருண் என்பவர் உதவி உள்ளார். இது தொடர்பாக ஏகே தருண் வெளியிட்ட ட்வீட் பதிவில், மாணவி அமுதா அவர்களை நான்கு நாட்களுக்கு முன் அவர் இல்லத்தில் சந்தித்தோம். அவர் முத்தாயம்மாள் கல்லூரியில் சேர விரும்பிய course, கல்லூரி நிர்வாகத்திடம் பேசி, இரண்டு நாட்களுக்கு முன் கல்லூரி சென்று சீட் உறுதி செய்யப்பட்டது என்று கூறியுள்ளார்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications