"முதலிரவு".. குலுங்கி குலுங்கி அழுது போலீசுக்கு ஓடும் நபர்கள்.. வேலூரிலும் வெடித்த "தாம்பத்யம்"..ஏன்
வேலூர்: முதலிரவு பஞ்சாயத்து ஒன்று, போலீஸ் ஸ்டேஷன் வரைக்கும் சென்றுள்ளது.. இதுவும் 2 ஸ்டேஷன்களில் புகார்கள் பறந்துள்ளது.. இந்த 2 புகாரில் ஒரு புகாரானது, கடல்தாண்டி கனடாவுக்கே சென்றுள்ளது.. என்னவாம்?
வேலூரை சேர்ந்தவர் அந்த இளம்பெண்.. 28 வயதாகிறது.. இவர் வேலூர் மகளிர் போலீசில் பரபரப்பு புகார் ஒன்றை தந்துள்ளார்.. அந்த புகாரில் கூறியிருப்பதாவது:

"எம்டெக் பட்டதாரியான எனக்கும், சென்னை அரும்பாக்கத்தை சேர்ந்த கமலேஷ் (31) என்பவருக்கும் இருவீட்டார் சம்மதத்துடன் கடந்தாண்டு மார்ச் மாதம் திருமணமானது. அப்போது எனக்கு தாய் வீட்டில் இருந்து வரதட்சணையாக 35 சவரன் நகை, ரூ.1 லட்சம் ரொக்கம் மற்றும் பாத்திரங்கள் உள்ளிட்டவை வழங்கினர்.
முதலிரவு: என்னுடைய கணவர் கனடா நாட்டு குடியுரிமை பெற்று அங்கு இன்ஜினியராக உள்ளார். திருமணம் நடந்து முதலிரவுக்கு ஏற்பாடு செய்தார்கள்.. ஆனால் அவர், தனக்கு உடல்நிலை சரியில்லை, இப்போது முதலிரவு வேண்டாம். கனடா நாட்டில் வைத்துக்கொள்ளலாம் என்று சொன்னார்.. இதையடுத்து, சில நாட்களிலேயே எனக்கு விசா ஏற்பாடு செய்வதாக கூறிவிட்டு, அவர் மட்டும் கனடாவுக்கே சென்றுவிட்டார். முன்னதாக என்னுடைய 35 சவரன் நகைகளை வங்கியில் அடமானம் வைத்து பணம் பெற்று சென்றார்.
தொடர்ந்து எனது மாமியார், மாமனார் 100 சவரன் நகை வரதட்சணையாக வாங்கி வரும்படி கூறி சித்ரவதை செய்தனர். தனது மகன் கனடாவில் ரூ.8 லட்சம் சம்பாதிக்கும் நிலையில், பெரிய இடங்களில் வரன் வந்தும் அதனை புறக்கணித்து எனக்கு திருமணம் செய்ததாக கூறி திட்டினார்கள்.. சில மாதங்களில் எனக்கும், எனது மாமியாருக்கும் சேர்த்து கணவர் விசா எடுத்து கனடாவுக்கு அழைத்துச்சென்றார். ஆனால் அங்கும் முதலிரவு நடக்காமல் புறக்கணித்தார்.
அளவு சாப்பாடு: பிறகு அளவு சாப்பாடு போட்டு என்னை சித்ரவதை செய்தார்கள்.. இந்நிலையில் குழந்தை பெற்றுக்கொள்வற்காக எனது மனைவி என்னை நிர்ப்பந்தம் செய்து தாம்பத்ய உறவுக்கு அழைக்கிறார் என்று கனடா நாட்டு போலீசில் என் மீது கணவர் புகார் அளித்தார். அதன் பின்னர் என்னை தவிக்கவிட்டு மாமியாரும், கணவரும் வேறு எங்கோ சென்றுவிட்டனர். பிறகு, பெரும் போராட்டத்திற்கு மத்தியில் கனடா நாட்டில் இருந்து தாய்நாடு திரும்பியிருக்கிறேன்.
என்னுடைய கணவர் கனடா நாட்டு குடியுரிமை பெற்றுள்ளதால், அங்கேயே என்னை விவாகரத்து செய்ய உள்ளதாக மெசேஜ் அனுப்பி வைத்திருக்கிறார்..
இதற்கு எனது கணவரின் பெரியப்பா முனிரத்தினம், அவரது மனைவி ராஜேஸ்வரி, மாமானர் முத்துகாளத்தி, மாமியார் புவனேஸ்வரி ஆகியோர் காரணமாக உள்ளனர். என் கணவர் ஆண்மை தகுதி இல்லாததை மறைத்து, திருமணம் செய்துள்ளார். அதனால், கணவர், அவரது பெற்றோர், பெரியப்பா, பெரியம்மா ஆகிய 5 பேர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.
வேலூர் புகார்: வேலூர் அனைத்து மகளிர் போலீசார் இதுகுறித்து விசாரித்து வருகின்றனர் என்றாலும், கனடா நாட்டிலும் புகார் பதிவாகி உள்ளதாக தெரிகிறது.. கட்டாயப்படுத்தி உறவுக்கு அழைக்கிறார் என்று மனைவி மீது கணவரும், முதலிரவே நடத்தாமல் தட்டிக்கழிக்கிறார் என்று கணவன் மீது மனைவியும் புகார்களை தந்துள்ளதால், இந்த புகாரானது மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது..
கடந்த சில நாட்களுக்கு முன்பு கர்நாடகாவிலும் இப்படி ஒரு பிரச்சனை கிளம்பியது.. மாண்டியா மாவட்டத்தில் வசித்து வந்த 21 வயது பெண்ணுக்கு ஒரு வருடம் முன்புதான் திருமணம் நடந்துள்ளது..

புதிய பிரச்சனை: அந்த பெண் பரப்பன அக்ரஹார போலீசாரிடம் தந்த புகாரில், "திருமணம் முடிந்து ஒரு வருஷமாகியும், கணவர் என்னுடன் உடலுறவு வைத்துக்கொள்வதில்லை, விவாகரத்து தரவும் மறுக்கிறார்.. அடிக்கடி கோபப்படுகிறார்.. நான் நெருங்கி சென்று அன்பாக பேசினாலும், அவர் சரியாக பேசுவதில்லை, என் வாழ்க்கையே நாசமா போச்சு" என்று புகார் கூறியிருந்தார்.
இப்படி ஒரு வழக்கில்தான், 4 நாட்களுக்கு முன்பு டெல்லி ஹைகோர்ட் ஒரு தீர்ப்பு சொல்லியிருந்தது. அங்குள்ள ஒரு இளம் தம்பதிக்கும் இதே பிரச்சனை ஒரு வருடமாக இருந்து வந்துள்ளது.. அந்த பெண்ணுக்கு, "பாலுறவு என்றாலே அச்சத்துக்கு ஆளாகும் ஜீனோபோபியா" என்ற பிரச்சனை இருக்கிறதாம்.. அதனால், பாலியல் உறவுக்கு மறுப்பு தெரிவித்து வந்துள்ளார். இதனால் கணவர் விவாகரத்து கேட்டாலும், அதையும் தர மறுத்துள்ளார். அதற்கு பிறகுதான் அந்த கணவர் டெல்லி கோர்ட்டுக்கு ஓடினார்.
அதிரடி தீர்ப்பு: இதை விசாரித்த நீதிபதி, மனைவி தரப்பில் வைக்கப்பட்ட காரணத்தை ஏற்க மறுத்தார்.. "ஓராண்டாக உடலுறுவுக்கு மறுப்பது என்பது கொடூரத்திற்கு சமம் என்றும், கணவன் - மனைவி இருவரில் ஒருவர், வேண்டுமென்றே பாலுறவைத் தவிர்ப்பது, மனரீதியிலான கொடுமைப்படுத்துவதில் சேரும் என்றும் அதிரடியாக தீர்ப்பு தந்திருந்தார் நீதிபதி... இந்த தீர்ப்பு பலரது கவனத்தையும் இப்போது வரை திரும்பி பார்க்க வைத்து வருகிறது..!!!












Click it and Unblock the Notifications