பிராமணரல்லாத அர்ச்சகர்.. கருணாநிதிக்கு கிடைத்த பெரிய வெற்றி.. ஸ்டாலின் மகிழ்ச்சி
பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சார்ந்தவர் அர்ச்சகரானது திமுக தலைவர் கருணாநிதிக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி என்று திமுக செயல்தலைவர் ஸ்டாலின் பேட்டியளித்துள்ளார்.
Recommended Video

சென்னை: பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சார்ந்தவர் அர்ச்சகரானது திமுக தலைவர் கருணாநிதிக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி என்று திமுக செயல்தலைவர் ஸ்டாலின் பேட்டியளித்துள்ளார்.
திமுக தலைவர் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆக வேண்டும் என்று பல வருடங்களாக போராடினார். கருணாநிதியின் முக்கியமான கனவுகளில் ஒன்று இது என்று கூட கூறலாம். 2006ல் முதல்வராக இருந்த சமயத்தில், அரசாணை ஒன்றை வெளியிட்டார். அதன்படி அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்று சட்டம் கொண்டு வரப்பட்டது.

இதற்காக 50 ஆண்டுகளாக குரல் கொடுத்து வந்தார். அதன்படி 2008ல் 206 பேர் அர்ச்சகராக பயிற்சி பெற்றார்கள். ஆனால் இவர்களுக்கு இவ்வளவு வருடம் பணி ஆணை வழங்கப்படாமல் இருந்தது.
தற்போது மதுரையை மாரிச்சாமி என்பவர், அர்ச்சகராக நியமிக்கப்பட்டு இருக்கிறார். பல வருட போராட்டங்களுக்கு பின்பு திமுகவின் இந்த கனவு திட்டம் கருணாநிதி மருத்துவனையில் இருக்கும் போது நடைமுறைக்கு வந்துள்ளது.
பல்வேறு போராட்டங்களை கடந்து, மதுரையில் உள்ள கோவிலில் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சார்ந்தவர் அர்ச்சகராக நியமிக்கப்பட்டிருப்பது, பெரியாரின் கனவை சட்டமாக்கிய தலைவர் கலைஞர் அவர்களுக்கு கிடைத்திருக்கும் மாபெரும் வெற்றி! இது திராவிட இயக்கத்தின் வரலாற்றுச் சாதனை! #TamilPrideKalaignar
— M.K.Stalin (@mkstalin) July 31, 2018
இதுகுறித்து திமுக செயல்தலைவர் ஸ்டாலின் டிவிட் செய்துள்ளார். அதில் ''பல்வேறு போராட்டங்களை கடந்து, மதுரையில் உள்ள கோவிலில் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சார்ந்தவர் அர்ச்சகராக நியமிக்கப்பட்டிருப்பது, பெரியாரின் கனவை சட்டமாக்கிய தலைவர் கலைஞர் அவர்களுக்கு கிடைத்திருக்கும் மாபெரும் வெற்றி! இது திராவிட இயக்கத்தின் வரலாற்றுச் சாதனை!'' என்றுள்ளார்.
-
Vairamuthu: கருணாநிதியின் 103-வது பிறந்தநாள்.. கவிதையால் புகழாரம் சூட்டிய வைரமுத்து -
"கடைசி மூச்சு வரை உங்களுக்காக உழைப்பேன்!" - கலைஞர் கருணாநிதியின் இறுதிப் பேருரை.. என்ன பேசினார்? -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications