”குழந்தையா? மீனா?” அலங்காநல்லூரில் வினோத குழந்தை
மதுரை: மதுரையை அடுத்த அலங்காநல்லூரில் மீன் வடிவத்தில் பிறந்துள்ள அதிசய குழந்தையால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் ஒன்றியம் பாலமேடு அருகே உள்ள சத்திரவெள்ளாளபட்டியை சேர்ந்தவர் சதீஸ்குமார் .இவரது மனைவி துர்காதேவி. இந்த தம்பதிகளுக்கு ஏற்கனவே 3 குழந்தைகள் உள்ளது.
இந்த நிலையில் 4 ஆவதாக துர்கா தேவி கர்ப்பம் அடைந்தார். பிரசவ வலி ஏற்பட்டு மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு நேற்று காலை குழந்தை பிறந்தது. இந்த குழந்தைக்கு இடுப்பு பகுதிக்கு கீழ் ஆண் பெண் பாலின வேறுபாடு இன்றி "மீன்வால்" போன்ற உருவ அமைப்பில் காணப்பட்டது.
பிறந்த இந்த குழந்தையை உடனடியாக மருத்துவமனையிலிருந்து வீட்டிற்கு தூக்கி வந்து விட்டனர். இது குறித்த பாலமேடு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கேட்ட போது சுகாதார ஆய்வாளர் மனோகரன் , " இந்த குழந்தை முழு வளர்ச்சி பெறாததால் உடல் உறுப்புகள் குறைபாடுகளுடன் பிறந்துள்ளது.
இதை பார்வையிட்டு நேரில் ஆய்வு செய்தோம். தொடர்ந்து 10 ஆவது மாதத்தில் சுகப்பிரசவமாக பிறந்த இந்த குழந்தை தற்போது முழு வளர்ச்சியின்றி ஒரு கை குட்டையாக 2 விரல்களுடனும் மற்றொரு கையில் 6 விரல்களுடனும் இடுப்புக்கு கீழ்பகுதி ஆண் பெண் உறுப்புகள் இன்றி மீன் வால் போன்று அமைப்பில் உள்ளது. இந்த குழந்தை இதுவரை உயிரோடுதான் உள்ளது" என்றார்.
இந்த பெற்றோர்களுக்கு ஏற்கனவே 3 பெண் குழந்தைகள் உள்ளது. மீன் வடிவத்தில் பிறந்த இந்த அதிசய குழந்தையை சுற்று வட்டார கிராம பொதுமக்கள் சென்று பார்த்து வருகின்றனர்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications