அரபிக்கடலில் மீன்பிடித்தடைக்காலம் இன்று முதல் அமல்.. நிவாரணம் உயர்த்தி தர மீனவர்கள் கோரிக்கை
அரபிக்கடலில் நள்ளிரவு முதல் மீன்பிடி தடைக்காலம் தொடங்கியுள்ளது.
Recommended Video

கன்னியாகுமரி: அரபிக்கடலில் நள்ளிரவு முதல் மீன்பிடி தடைக்காலம் தொடங்கியுள்ளது. இதனால் குளச்சல், முத்தம் உள்ளிட்ட மீன்பிடி துறைமுகங்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசைப் படகுகள் நிறுத்தப்பட்டுள்ளன.
ஆண்டுதோறும் மீன்கள் இனப்பெருக்கம் செய்யும் காலங்களில் விசைப்படகுகளுக்கு மீன்பிடிக்க மத்திய அரசு 60 நாட்கள் தடை விதித்துவருகிறது. அதன்படி, கன்னியாகுமரியில் மீன்களின் இனபெருக்கத்திற்காக கிழக்கு கடற்கரையில் மீன்பிடி தடைக்காலம் முடிவடந்ததை தொடர்ந்து இன்று முதல் மேற்கு கடற்கரை பகுதிகளான மூட்டம் முதல் நீரோடி வரை மற்றும் கேரளாவிலும் மீன்பிடி தடைக்காலம் துவங்கியது.

பழவேற்காடு முதல் கன்னியாகுமரி வரை ஒரு பகுதியாகவும், கன்னியாகுமரி முதல் நீரோடி வரை ஒரு பகுதியாகவும் கடை பிடிக்கப்படுகிறது. கன்னியாகுமரி முதல் நீரோடி வரை மீன் பிடி தடைக்காலம் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. இதனால் குளச்சல், முத்தம் உள்ளிட்ட மீன்பிடி துறைமுகங்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசைப் படகுகள் நிறுத்தப்பட்டுள்ளன. மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.

குமரி மாவட்டத்தை பொறுத்தவரையில் இந்த பகுதிகள் அரபிக்கடல் பகுதியில் வருவதால் இந்த பகுதியில் உள்ள மீனவர்கள் புவியியல் தன்மைக்கு ஏற்ப கேரளா பகுதியை சார்ந்து தொழில் செய்கின்றனர். எனவே கேரளாவை போன்று குமரி மாவட்டத்திற்கும் தடைக்காலத்தை நாற்பத்தி ஐந்து நாட்களாக குறைக்க வேண்டும் என்று மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழகத்தில் மீன் பிடி தடை காலத்தை அரசு அறிவித்து இருந்தாலும் குமரி மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான மீனவர்கள் ஆழ்கடல் மீன் பிடி தொழில் செய்து வருவதால் மீன் இனபெருக்கத்திற்கு பாதிப்பு ஏற்படாது என்றும், இது குறித்து ஒரு வல்லுனர் குழுவை அமைத்து அவர்களிடம் கருத்தை பெற்று ஆழ்கடல் மீன்பிடிப்பவர்களுக்கு தடை காலத்தில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் எனவும் அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர். அத்துடன், தற்போது அரசு வழங்கும் தடைக்கால நிவாரண தொகையை ஐந்தாயிரத்தில் இருந்து பத்தாயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும் எனவும் மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications