4 சென்னை ஏரிகளில் இருந்து நீர் திறப்பு: பெரும் வெள்ளம்- போக்குவரத்து முடங்கியது
காஞ்சிபுரம்: சென்னை மற்றும் திருவள்ளூரில் மீண்டும் கனமழை பெய்து வருவதால் சென்னைக்கு குடிநீர் வழங்கும் பூண்டி, புழல், சோழவரம், செம்பரம்பாகம் ஏரிகளுக்கு வரும் நீரின் அளவு அதிகரித்துள்ளது. ஏரிகளின் பாதுகாப்பு கருதி உபரி நீர் முழுவதும் திறந்து விடப்படுவதால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
பூண்டி ஏரியில் இருந்து வினாடிக்கு 18,000 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. நீர் திறப்பு அதிகரிப்பால் கொசஸ்தலை ஆற்றின் கரையோரத்தில் இருக்கும் மணலி,புதுநகர்,விச்சூர், ஈச்சங்கோவில் ஆகிய கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

போக்குவரத்து நிறுத்தம்
பூண்டி ஏரியில் திறக்கப்பட்ட தண்ணீரால் திருவள்ளூர் மாவட்டத்தில் கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக கொசஸ்தலை ஆற்றுப் பாலம் உடைந்ததால் சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது

மதுராந்தகம் ஏரி திறப்பு
காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் ஏரியில் இருந்து வினாடிக்கு 20,000 கனஅடி உபரி நீர் திறந்துவிடப்பட்டுள்ளதால் 15 கரையோர கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இடைவிடாது பெய்து வரும் மழையால் மதுராந்தகம் ஏரியில் இருந்து திறந்துவிடப்படும் உபரி நீரின் அளவு அதிகரிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மழையால் மதுராந்தகத்தில் தாழ்வான இடங்களில் வெள்ள நீர் தேங்கியுள்ளது.

புழல் ஏரி
புழல் ஏரியில் 2790 மில்லியன் கனஅடி தண்ணீர் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. இதன் மொத்த கொள்ளளவு 3330 மில்லியன் கனஅடி உயரம் 21.20 அடி. ஏரிக்கு 1027 கனஅடி தண்ணீர் வருகிறது. 1050 கனஅடி திறந்து விடப்படுகிறது.

செம்பரம்பாக்கம் ஏரி
செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த கொள்ளளவு 3645 மில்லியன் கனஅடி. தற்போது 3197 மில்லியன்கனஅடி தண்ணீர் இருப்பு. இதன் மொத்த உயரம் 24 அடி. இதில் 22.30 அடி தண்ணீர் இருக்கிறது. 8 ஆயிரம் கனஅடி தண்ணீர் வருகிறது. 5 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்துவிடப்படுகிறது.

சோழவரம் ஏரி
சோழவரம் ஏரி கொள்ளளவு 881 மில்லியன்கனஅடி. உயரம் 17.86 அடி. இப்போது தண்ணீர் இருப்பு 600 மில்லியன் கனஅடி. ஏரிக்கு 423 கனஅடி தண்ணீர் வருகிறது. 400 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்படுகிறது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications