காஞ்சிபுரம் மாவட்டத்தில் மழை வெள்ளத்துக்கு 22 பேர் பலி
காஞ்சிபுரம்: வடகிழக்கு பருவ மழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி காஞ்சிபுரம் மாவட்டத்தில் மட்டும் 22 பேர் உயிரிழந்துள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
முன்னெப்போதும் இல்லாத வகையில் வடகிழக்கு பருவமழை இந்தாண்டு பயங்கரமாக கொட்டி தீர்த்தது. மாதக் கணக்கில் பருவமழை நீடிக்கும் என்ற காலம் போய் ஓரிரு நாட்களிலேயே ஒரு மாத மழையை கொட்டி தீர்த்துவிட்டது.

இதனால் ஏரிகள் உள்ளிட்ட நீர்நிலைகள் நிரம்பி வெள்ளமென உபரிநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. அதிகமான ஏரிகளைக் கொண்ட காஞ்சிபுரம் மாவட்டத்தில் பெரும்பாலான ஏரிகள் நிரம்பி உபரி நீர் ஆறுகளில் வெளியேற்றப்படுகின்றன.
இதனால் காஞ்சிபுரம் மாவட்டமே வெள்ளக்காடாக இருக்கிறது. காஞ்சிபுரம் மாவட்டத்தின் பல பகுதிகள் தென்சென்னையிலும் அடங்கும். இம்மாவட்டத்தில் தற்போதைய பருவமழைக்கு மொத்தம் 22 பேர் உயிரிழந்துள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
கடலூர் மாவட்டத்தில் 55க்கும் அதிகமானோர் உயிரிழந்த நிலையில் அதற்கடுத்ததாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications