வெள்ள நிவாரணங்கள் மக்களுக்கு சரியாக சென்றடையவில்லை: பொன். ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு
சென்னை: தமிழக அரசு வழங்கும் மழை வெள்ள நிவாரண பொருட்கள் மக்களுக்கு சரியாக சென்றடையவில்லை என மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் குற்றம்சாட்டியுள்ளார்.
கடந்த ஒருவார காலமாக சென்னை மற்றும் அதன் புற நகர் பகுதிகள் வெள்ளக் காடாக காட்சி அளிக்கிறது. இந்த மழையின் காரணமாக தாம்பரம், முடிச்சூர், மண்ணிவாக்கம், சேலையூர், பல்லாவரம், மப்பேடு, அகரம்தென், சோழிங்கநல்லூர், பெரும்பாக்கம், செம்மஞ்சேரி, காரப்பாக்கம், வண்டலூர், கொளப்பாக்கம், கூடுவாஞ்சேரி ஆகிய பகுதிகளில் உள்ள பள்ளமான இடங்களில் மழைநீர் ரோடுகளில் 3 அடிக்கு மேல் பயங்கரமாக பெருக்கெடுத்து ஓடியது.

தாம்பரம், வேளச்சேரி, சோழிங்கநல்லூர் மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு வேண்டிய உணவு, போர்வை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், வில்லிவாக்கம் பகுதியில் பெய்த கனமழைக்கு சிட்கோ நகரில் உள்ள வீடுகளுக்குள் மழை நீர் புகுந்தது. வாகனங்களும் வெள்ளநீரில் அடித்துச் செல்லப்பட்டது.
இதையடுத்து வெள்ளம் பாதித்த சென்னை வில்லிவாக்கம் சிட்கோ நகரை மத்திய அமைச்சர் பொன்.ராதகிருஷ்ணன் இன்று பார்வையிட்டார். பின்னர் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பாஜக சார்பில் நிவாரண உதவிகளை வழங்கினார்.
அப்போது செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், தமிழகத்தில் வெள்ளம் பாதித்த பகுதிகளை பார்வையிட மத்திய குழு நாளை தமிழகம் வருகிறது. இந்த குழு வெள்ள சேதங்களை ஆய்வு செய்யும். இந்த ஆய்வுப் பணி கடலூர் மாவட்டம் பண்ருட்டியிலிருந்து தொடங்கி நடைபெறும் என்று தெரிவித்தார்.
மேலும், சென்னையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரணப் பணிகள் முறையாக நடைபெறவில்லை மக்களுக்கு நிவாரண பொருட்கள் சரியாக சென்றடையவில்லை என்றும் பொன். ராதாகிருஷ்ணன் குற்றம்சாட்டினார்.
-
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications