ஆடி காற்று ஆவேசம்… உதிரும் பூக்கள்… விலை வீழ்ச்சியால் விவசாயிகள் கவலை
நெல்லை: ஆடி காற்றுக்கு அம்மியே பறக்கும் என்பார்கள்... அந்த அளவிற்கு ஆவேசமாக வீசும். நெல்லை மாவட்டத்தில் ஆடிக்காற்று பலமாக வீசுவதால் மல்லிகை பூக்கள் உதிர்ந்து வீணாகி வருகின்றன. அதோடு விலையும் வீழ்ச்சியடைந்துள்ளதால் மலர் சாகுபடியில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் கவலையில் உள்ளனர்.
தமிழகம் முழுவதும் தற்போது ஆடி காற்று பலமாக வீசி வருகிறது. நெல்லை மாவட்டத்தில் காற்றின் வேகம் அதிகமாக உள்ளதால் மல்லிகை உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் மானூர், வல்லவன்கோட்டை, சங்கரன்கோவில் சுற்று வட்டார பகுதிகள், கண்டங்குறிச்சி, கங்கைகொண்டான் அருகே ராஜபதி சுற்று வட்டார கிராமங்கள், தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு அருகே உள்ள கிராமங்கள் என பல இடங்களில் மல்லிகை சாகுபடி செய்யப்படுகிறது.

இப்பகுதியில் மல்லிகை விளைசசல் களை கட்டியுள்ள நிலையில் பலமாக வீசும் ஆடிக்காற்றால் செடிகளில் இருந்து மொட்டுகள் உதிர்கின்றன. இதனால் எதிர்பார்த்த விளைச்சல் இல்லை. இந்நிலையில் பூ விளையும் கிலோ ரூ.100 ஆக சரிந்துள்ளது. இதுகுறித்து பூ விற்பனையாளர்கள் கூறுகையில், ஆடி மாதம் திருமணம் உள்ளிட்ட மங்கல நிகழ்ச்சிகள் எதுவும் நடப்பது இல்லை. இதனால் பூக்கள் விற்பனை பொதுமாக சுமாராக இருக்கும்.

தற்போது பிச்சிப் பூ கிலோ ரூ.130க்கும், மல்லிகை கிலோ ரூ.100க்கும் விற்பனையாகிறது. காற்று காரணமாக மல்லிகை விளைச்சல் குறைந்துள்ள நிலையில் பிச்சிபூ வரத்து அதிகமாக உள்ளது. இதனால் மல்லிகைக்கு கிராக்கி இல்லை. பிற பூக்களின் விலையும் சராசரியாகவே உள்ளது. இதனால விவசாயிகளுக்கு பெருத்த நஷ்டம் ஏற்பட்டுள்ளது. பலர் பூக்களை பறிக்காமல் அப்படியே விட்டு விட்டதாக கூறப்படுகிறது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications