For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அம்மா உணவகத்தில் பிரியாண விருந்தா? - பறக்கும் படை சோதனையால் பரபரப்பு

Google Oneindia Tamil News

Flying squad inspected an Amma canteen near Tuticorin
தூத்துக்குடி: தூத்துக்குடியில் அம்மா உணவகத்தில் அசைவ விருந்து வழங்கப்படுவதாக கிடைத்த தகவலை தொடர்ந்து அம்மா உணவகத்தில் பறக்கும் படையினர் சோதனை போட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தூத்துக்குடியில் அரசு மருத்துவமனையில் உள்ள அம்மா உணவகத்தில் தேர்தலை முன்னிட்டு விதிமுறைக்கு புறம்பாக அசைவ விருந்து வழங்கப்படுவதாக கிடைத்த தகவலை தொடர்ந்து தேர்தல் பறக்கும் படை தாசில்தார் வள்ளி கண்ணு தலைமையிலான அதிகாரிகள் அங்கு சென்று சோதனையிட்டனர்.

இதில் அங்கு அசைவ உணவு எதுவும் வழங்கப்படவில்லை என தெரிய வந்தது. அரசு அறிவித்துள்ள உணவுகள் மட்டுமே வழங்கப்பட்டது தெரிந்தது. இதையடுத்து அதிகாரிகள் சோதனை முடிந்து திரும்பி சென்றனர்.

இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு இடஙகளில் தேர்தல் விதிமுறைகளை மீறுவதாக ஆளும்கட்சியை தவிர்த்து பிற கட்சிகள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்வதாக புகார் எழுந்துள்ளது. தேர்தல் விதிமுறைகளை மீறுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று அரசியல் கட்சியினர் எதிர்பார்க்கின்றனர். அம்மா உணவகத்தில் திடீர் சோதனை மேற்கொண்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

English summary
The flying squad led by Mr. Vallikannu inspected an Amma canteen near Tuticorin Government Medical College Hospital to check whether any political cadre was involved in serving food to voters contrary to regular activities in the canteen. However, no such activity was found.He said the raid was necessitated after a call that food was being served to people in violation of the poll code.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X