மக்கள் கலை இலக்கிய கழக நிர்வாகி கோவன் கைது: உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல்
திருச்சி: தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை மூடுமாறு போராட்டத்தில் ஈடுபட்டு வந்த 'மக்கள் கலை இலக்கிய கழக' நிர்வாகி கோவன் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டார். அவரை விடுவிக்க வலியுறுத்தி, சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
போராட்டத்தின் ஒரு பகுதியாக, "மூடு டாஸ்மாக்கை மூடு', ' ஊத்திக் கொடுத்த உத்தமி போயசில் உல்லாசம்" என்ற இரண்டு பாடல்கள் ஒரு இணைய செய்தி தளத்தில் வெளியிடப்பட்டது.இந்த பாடல் வரிகளுக்கான வீடியோவில் முதலமைச்சர் ஜெயலிதாவின் படம் மற்றும் வீடியோ பயன்படுத்தப்பட்டுள்ளது.

அதனைத்தொடர்ந்து இன்று அதிகாலை 2.30 மணிக்கு திருச்சியில் உள்ள கோவன் வீட்டிற்குச் சென்ற சென்னை குற்றப் பிரிவு போலிசார் அவரைக் கைது செய்தனர். தமிழக அரசுக்கு எதிராக மக்களைத் தூண்டிவிடும் வகையிலும், தமிழக அரசின் மது விலக்கு கொள்கையை கொச்சைப்படுத்தும் வகையிலும் இந்த பாடல் அமைந்துள்ளதாகக் கூறி, அவர் மீது, 124 ஏ தேசத்துரோக நடவடிக்கை, 153 சமூகத்தில் இரு பிரிவினருக்கிடையில் மோதல் ஏற்படுத்துதல், 502/1 அவதூறு செய்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதே நேரம் கோவனை கைது செய்த போலீசார் அவரை எங்கு வைத்துள்ளனர் என்று கூற மறுத்துவிட்டனர்.
இந்நிலையில், கோவன் இருக்கும் இடம் குறித்து காவல்துறையினர் தெரிவிக்க மறுத்ததால், சென்னை உயர்நீதிமன்றத்தில் மக்கள் கலை இலக்கிய கழகத்தின் சார்பில் ஆட்கொணர்வு மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
குடிச்சுப் போட்ட பாட்ல தூக்கி எடைக்கி போட்டானாம்.....எடைக்கி போட்ட காச வாங்கி குடிச்சி போட்டானாம்......!!!
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications