ரயில் சிக்னல் ஏணி எமனாக மாறியதால் உடல் துண்டாகி உயிரிழந்த பிரவீண், மணி
ரயில் சிக்னலை சரிபார்க்க நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஏணி எமனாக மாறியதால் மின்சார ரயிலில் படியில் தொங்கியபடி பயணம் செய்த மூவர் உடல் துண்டாகி உயிரிழந்துள்ளனர்.
சென்னை: ரயில் சிக்னலில் பொருத்தப்பட்டிருந்த ஏணிதான் இன்று சென்னையில் 3 பேர் பலியாக காரணமாக இருந்ததற்கு எமனாக இருந்துள்ளது தெரிய வந்துள்ளது. பணிக்காக அவசரம் அவசரமாக ஓடிவந்து மின்சார ரயிலில் ஏறிய மணி, பிரவீணுக்கு தெரியாது அதுதான் கடைசி பயணம் என்று. மின்சார ரயிலில் கூட்டம் நெருக்கித்தள்ள, படியில் தொங்கியபடியே பயணம் செய்தனர்.

ரயில் பரங்கிமலையை தாண்டி பழவந்தாங்கலை நெருங்கியபோது எதிர்பாரத விதமாக அந்த விபத்து ஏற்பட்டது. சிக்னலை சரி செய்ய நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஏணியில் பிரவீண் முதுகில் தொங்கிக் கொண்டிருந்த பை சிக்கியது. இதில் தடுமாறி கீழே விழுந்தார் பிரவீண்.

சிக்னலில் நிறுத்தப்பட்டிருந்த ஏணி லேசாக திரும்பவே, ரயிலில் தொங்கியபடி பயணித்த 7 பேர் அடுத்தடுத்து கீழே விழுந்தனர். இதில் பெருங்களத்தூரைச் சேர்ந்த பிரவீண், மணி ஆகியோரின் உடல்கள் துண்டாகின. இவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
ரயில் விபத்தில் காயமடைந்தவர்களை குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இவர்களின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. இதில் ஒருவர் திருவண்ணாமலையைச் சேர்ந்த மதுசூதனன் என்றும், தாம்பரத்தைச் சேர்ந்த கோபிநாத் என்பதும் தெரியவந்துள்ளது. மேலும் இருவரின் பெயர் தெரியவில்லை. சிகிச்சைக்கு கொண்டு வரும் வழியில் உயிரிழந்த 3வது நபரின் பெயரைப் பற்றிய தகவலும் வெளியாகவில்லை.

மின்சார ரயில்களில் படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இன்று விபத்து நடந்த இடத்தில் மட்டும் இதுவரை 11 விபத்துக்கள் நடந்துள்ளதாக பழவந்தாங்கல் பகுதி மக்கள் வேதனையுடன் தெரிவித்துள்ளனர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications