வியாபாரமான கல்வி, கிட்னியை விற்று படிக்க வைக்கும் தமிழக பெற்றோர்: திடுக் தகவல்
சென்னை: தனது மகனின் உயர் கல்விக்காக 37 வயது தாய் ஒருவர் தனது சிறுநீரகத்தை விற்க முன்வந்துள்ளார்.
உடல் உறுப்புகளை விற்பனை செய்வது சட்டப்படி குற்றம் ஆகும். அதற்கு அதிகபட்சமாக 7 ஆண்டுகள் சிறை தண்டனை கிடைக்கலாம். இந்நிலையில் பெண் ஒருவர் சென்னையில் உள்ள மருத்துவர்களுக்கு கடந்த 25ம் தேதி இமெயில் ஒன்றை அனுப்பியுள்ளார்.

அந்த இமெயிலில் அவர் கூறியிருப்பதாவது,
என் சிறுநீரகத்தை விற்பனை செய்ய விரும்புகிறேன். எனக்கு 37 வயது ஆகிறது. திருமணமானவள் நான். என் மகனின் மேல்படிப்புக்கு என்னிடம் பணம் இல்லை. குடும்பத்தில் பிரச்சனையாக உள்ளது. சார், எனக்கு உதவி செய்ய முடியுமா?...என் ரத்தம் பி பாசிட்டிவ் வகையைச் சேர்ந்தது என்று தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கல்லூரியில் மாணவ, மாணவியர் சேர்க்கை நடக்கும்போது பல பெற்றோர்கள் இது போன்று சிறுநீரகத்தை விற்பனை செய்ய முன்வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து மோகன் பவன்டேஷன் என்ற என்.ஜி.ஓ.வின் தலைவர் டாக்டர் சுனில் ஷ்ராப் கூறுகையில்,
உயர் கல்வி என்பது விலை உயர்ந்ததாகிவிட்டது. அதனால் பெற்றோர் அல்லாடுகிறார்கள். சிறுநீரகத்தை விற்பனை செய்ய நினைக்கும் பெற்றோர் படிக்காதவர்களோ, மிகவும் ஏழையோ கிடையாது. முன்பு எல்லாம் கடனை அடைக்க, மகளுக்கு திருமணம் செய்ய மிகவும் ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் புரோக்கர் மூலம் சிறுநீரகத்தை விற்றனர் என்றார்.
கல்லூரியில் சேர்க்கை நடக்கையில் சிறுநீரகத்தை விற்கிறோம் என்று கூறி பல இமெயில்கள் வரும். கல்லூரி சேர்க்கை முடிந்த பிறகு இமெயில்களின் எண்ணிக்கை குறைந்துவிடும் என்கிறார்கள் மருத்துவர்கள்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications