For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பச்சரிசி மாவெடுத்து, பக்குவமா படையலிட்டு... தூத்துக்குடியில் பொங்கல் வைத்த வெளிநாட்டு பயணிகள்

Google Oneindia Tamil News

தூத்துக்குடி: தமிழக கலாச்சாரத்தை தெரிந்து கொள்ளும் வகையில் தமிழ்நாடு வந்துள்ள வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் சாயர்புரம் அருகே பொங்கல் பண்டிகையை உற்சாகமாக கொண்டாடி மகிழ்ந்தனர்.

சென்னையிலுள்ள ஒரு தனியார் அமைப்பு கடந்த 1 ஆண்டுக்கும் மேலாக வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு ஆட்டோ சுற்றுலா பயணத்தை நடத்தி வருகிறது.

இந்தாண்டு ஜெர்மன், ஆஸ்திரேலியா, ஹாலந்து, லண்டன் உள்பட பல்வேறு வெளிநாடுகளை சேர்ந்த 17 ஆண்கள், 9 பெண்கள் உள்பட 26 பேர் ஆட்டோக்களில் பயணம் செய்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு சென்று வந்துள்ளனர்.

சுற்றுலா பயணிகள்

சுற்றுலா பயணிகள்

வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் சனிக்கிழமை மாலை அவர்கள் தூத்துக்குடிக்கு வந்தனர். பின்னர் தூத்துக்குடி பழைய பஸ் நிலையம் அருகே உள்ள எஸ்ஏவி பள்ளி மைதானத்தில் டூவிபுரத்தை சேர்ந்த வாலிபர்களுடன் கிரிக்கெட் விளையாடி மகிழ்ந்தனர்.

பாரம்பரிய உடை

பாரம்பரிய உடை

26 பேரும் டூவிபுரத்தில் இருந்து ஆட்டோவில் சாயர்புரம் சென்றனர். அங்கு உள்ள தனியார் தோட்டத்தில் நமது பராம்பரிய உடையான வேட்டை, சேலை அணிந்து மண் பானையில் பொங்கலிட்டு மகிழ்ந்தனர்.

விளையாடிய பயணிகள்

விளையாடிய பயணிகள்

மேலும் பல்வேறு தமிழக விளையாட்டுகளை நடத்தி பொது மக்களுடன் பொழுதை கழித்தனர்.

உற்சாக கொண்டாட்டம்

உற்சாக கொண்டாட்டம்

அங்குள்ள பள்ளி, கல்லூரிகளை சுற்றி பார்த்து விட்டு நெல்லை வழியாக குற்றாலம் வந்தனர். அங்கு தங்கி மேலும் பல்வேறு இடங்களுக்கு செல்ல திட்டமிட்டுள்ளனர்.

English summary
Pongal festival was celebrated on January 4 exclusively for foreign tourists in Sayarpuram near Tuticorin.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X